யாருக்கிட்ட மோதுறீங்க சின்ன பசங்களா? உயிர்த்தெழும் Xiaomi.. டிச.,1 வரை காத்திருங்கள்!
ஸ்மார்ட்போன்கள் என்று வளர்ச்சி அடைந்த காலத்தில் ஸ்மார்ட்போன் சந்தையில் கொடிக்கட்டி பறந்த நிறுவனம் தான் Xiaomi. சமீபகாலமாக பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் சந்தையை ஆக்கிரமித்து வருகிறது. தொய்வடைந்து வந்த சியோமி, மீண்டும் உயிர்த்தெழும் வகையில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை டிசம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

டிசம்பர் 1 2022 அறிமுகம்
சியோமி நிறுவனம் Xiaomi 13 சீரிஸை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த தொடரில் சியோமி 13 வெண்ணிலா, சியோமி 13 ப்ரோ ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமியின் புதிய ஸ்மார்ட்போன்களானது டிசம்பர் 1 2022 அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என இந்திய யூடியூபர் சாஹில் கரோல் தெரிவித்துள்ளார்.

புதிய சியோமி ஸ்மார்ட்போன்
புதிய சியோமி ஸ்மார்ட்போன் குறித்த தகவல் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. பல ஆய்வாளர்கள் இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவலை வெளியிட்டு வருகின்றனர். அனைத்து தகவல்களிலும் இந்த ஸ்மார்ட்போன் 2023 இல் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 1 ஆம் தேதி அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குவால்காம் இன் முதன்மை சிப்செட்
Xiaomi நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் குறித்த பணிகளை தீவிரப்படுத்தி இருப்பது போல் தெரிகிறது. இதன்மூலமாகவே இந்த ஸ்மார்ட்போன் குறிப்பிட்ட தினத்தை விட முன்னதாகவே வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் இன் முதன்மை சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என பல தகவல்கள் ஊர்ஜிதமாக தெரிவிக்கிறது.

லெதர் ஃபினிஷ் பேனல்
சியோமி 13 தொடரின் இரண்டு ரெண்டகள் இணையதளத்தில் கசிந்துள்ளன. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனின் பின்புற வடிவமைப்பு மற்றும் சில வண்ண விருப்பங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்பது இதில் இடம்பெறும் சிப்செட் குறித்த தகவலை வைத்தே கணிக்கமுடிகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் லெதர் ஃபினிஷ் கொண்ட பிரவுன் கலர் ஆப்ஷனை கொண்டிருக்கும் என புதிய ரெண்டர் தகவல் தெரிவிக்கிறது. அதேபோல் பின்புறத்தில் சதுர வடிவத்தில் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தெரிகிறது. அதேபோல் இதன் பிரேம் அலுமினியத்தால் செய்யப்பட்டது போல் இருக்கிறது. ப்ரீமியம் விலை பிரிவு ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்பது ஏறத்தாழ முடிவு செய்ய முடிகிறது.

Xiaomi 13 சிறப்பம்சங்கள்
Xiaomi 13 சிறப்பம்சங்கள் குறித்து வெளியான தகவலை பார்க்கலாம். சியோமி 13 சீரிஸ் இல் சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த இரண்டு மாடல்களிலும் 2கே தெளிவுத்திறன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.2 இன்ச் எல்டிபிஓ அமோலெட் டிஸ்ப்ளே இடம்பெறும் என கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்
Xiaomi 13 சீரிஸ் ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. குவால்காம் இன் மிகவும் சமீபத்திய சக்தி வாய்ந்த சிப்செட் ஆகும். இதே சிப்செட் தான் ஒன்பிளஸ் 11 ப்ரோ, ஐக்யூ 11 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ், மோட்டோரோலா எட்ஜ் 40 அல்ட்ரா போன்ற பிற உயர்நிலை ஸ்மார்ட்போன்களிலும் இடம்பெறுகிறது.

50 எம்பி சோனி IMX989 கேமரா
Xiaomi 13 சீரிஸ் இன் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி சோனி IMX989 1-இன்ச் முதன்மை சென்சார் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த சென்சார் ஆனது OIS ஆதரவை கொண்டிருக்கும். இதில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறும் கூறப்படுகிறது. அதன்படி 50 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் இரண்டாம் நிலை கேமராவாகவும் மற்றும் 50 எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் மூன்றாம் நிலை கேமராவாகவும் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும்
Xiaomi 13 Pro மாடலில் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4800 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான எம்ஐயூஐ 13 மூலம் இயங்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டும் தானா என்றால் அதுதான் இல்லை. Xiaomi 13 சமீபத்தில் BIS (Bureau of Indian Standards) சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications