Samsung ஷாக் ஆகும் அளவிற்கு.. Amazon அறிவித்துள்ள ரூ.40,049 ஆபர்!
"என்னது ரூ.40,000 பிளாட் ஆபரா? இந்த விலைக்கு 2 இல்ல.. 3 புது ஸ்மார்ட்போன்கள் கூட வாங்கலாமே!" என்று யோசித்தால் நீங்கள் ஒரு - பட்ஜெட் வாசி!
அதுவே "என்னது ரூ..40,000 தள்ளுபடியா? ஒரு பிரீமியம், ஹை-எண்ட் ஸ்மார்ட்போனை வாங்க இதுதான் சரியான நேரம்!" என்று யோசித்தால்.. நீங்கள் - நீண்ட காலமாக பிளாக்ஷிப் மாடல்கள் மீது குறிவைக்கும் ஒரு ஸ்மார்ட்போன் பிரியர்!

ஒருவேளை நீங்களொரு ஸ்மார்ட்போன் பிரியர் என்றால்?
மிட்-ரேன்ஜ் மாடல்களை பயன்படுத்தி சலித்துவிட்டது; தாறுமாறான டிஸ்பிளே, பிரீமியம் லுக், வெறித்தனமான கேமராக்கள், வேற லெவல் பெர்ஃபார்மென்ஸ் என கொஞ்சம் அப்கிரேட் ஆக வேண்டும் என்கிற திட்டம் உங்களிடம் இருக்கிறதா?
ஆம் என்றால், இந்த கட்டுரை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்! ஏனெனில் Samsung நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது ரூ.1000, ரூ.2000 அல்ல, முழுதாக ரூ.40,000 என்கிற சலுகை அணுக கிடைக்கிறது!

அதென்ன மாடல்?
அமேசான் தளம், அதன் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2022-க்கு முன்னதாகவே ஒரு "வெயிட்டான" ஸ்மார்ட்போன் மீது "வெறித்தனமான" தள்ளுபடியை அறிவித்துள்ளது.
அது சாம்சங்கின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன - கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஆகும். எஸ்22 அல்ட்ரா மீது உங்களுக்கு ஒரு கண் இருந்தால், அதை வாங்குவதற்கு இது சரியான நேரமாக இருக்கலாம்.

Amazon வழங்கும் ரூ.40.049 தள்ளுபடி!
கூடிய விரைவில் அமேசானின் சிறப்பு விற்பனை நடக்கவுள்ள நிலைப்பாட்டில், சம்சங்கின் எஸ்22 அல்ட்ரா மீது 30% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
நினைவூட்டும் வண்ணம், Samsung Galaxy S22 Ultra-வின் 12GB + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அமேசானில் ரூ.1,31,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போது ரூ.40,049 என்கிற பிளாட் தள்ளுபடிக்குப் பிறகு இது ரூ.91,950 க்கு வாங்க கிடைக்கிறது.

இது கூட பேங்க் ஆபர் வேற?
இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, இந்த அளவிலான மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டதே இல்லை என்பதும் ஒருபக்கம் இருக்க, ரூ.40,049 என்கிற தள்ளுபடியை தவிர்த்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளின் வழியாக ரூ.1,250 என்கிற கூடுதல் தள்ளுபடியும் அணுக கிடைக்கிறது!

ரூ.91,950 க்கு Samsung Galaxy S22 Ultra வொர்த் ஆன ஸ்மார்ட்போனா?
Samsung Galaxy S22 Ultra-வை பார்த்து.. இது வொர்த்-ஆ? இல்லையா? என்று கேட்பதே தவறு! இது 'தி பெஸ்ட்' ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்.
அறியாதவர்களுக்கு, இது Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட் உடனாக 12GB RAM மற்றும் 1TB வரையிலான ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 6.8 இன்ச் அளவிலான எட்ஜ் குவாட் HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவை (120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்) பேக் செய்கிறது!

'அல்டிமேட்' கேமராக்கள்!
கேமராக்களை பொறுத்தவரை, எஸ்22 அல்ட்ரா மாடல் ஆனது 108எம்பி ப்ரைமரி ஷூட்டர் + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் + 12எம்பி அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 10எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10எம்பி டெலிஃபோட்டோ என்கிற குவாட் ரியர் கேமரா செட்டப்பை வழங்குகிறது.
முன்பக்கத்தில், இது 40எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

நல்ல ஃபாஸ்ட் சார்ஜிங், தேவைகளை பூர்த்தி செய்யும் பேட்டரி!
தள்ளுபடி விலையின் கீழ் ரூ.91,950 க்கு வாங்க கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த One UI 4.1 ஐ கொண்டு இயங்குகிறது.
மேலும் இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

எப்போது முதல் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2022 தொடங்கும்?
அமேசான் , தனது வரவிருக்கும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை உறுதிப்படுத்தியுள்ளதே தவிர சரியான விற்பனை தேதிகளை இன்னும் வெளியிடவில்லை.
இருந்தாலும் கூட இந்த விற்பனையின் போது, (வழக்கம் போல) ஸ்மார்ட்போன்கள் உட்பட பலதரப்பட்ட தயாரிப்புகளின் மீது நம்பமுடியாத சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அணுக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications