ரூ.15,000 விலையில் கைரேகை ஸ்கேனர் கொண்ட ஸ்மார்ட்போன்கள்.!!

Written By:

இந்தியாவில் இன்று வெளியாகும் பெரும்பாலான கருவிகளில் அத்தியாவசிய அம்சமாக இடம் பெறும் ஒன்று தான் கைரேகை ஸ்கேனர். கருவியை பாதுகாக்க அறிமுகம் செய்யப்பட்ட இந்த அம்சம், துவக்கத்தில் விலை உயர்ந்த கருவிகளில் மட்டும் தான் வழங்கப்பட்டது.

ஆனால் குறைந்த விலை கருவிகளுக்கு பெயர்போன இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தற்சமயம் விலை குறைந்த கருவிகளிலும் கைரேகை ஸ்கனர் அம்சம் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் ரூ.15,000 விலைக்கு இந்தியாவில் கிடைக்கும் தலைசிறந்த ஐந்து கருவிகளை பற்றி பார்ப்போமா..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கூல்பேட் நோட் 3

கூல்பேட்

கைரேகை ஸ்கேனர் அம்சம் கொண்டு இந்தியாவில் ரூ.10,000 பட்ஜெட்டில் வெளியான முதல் கருவி இது தான். சமீபத்தில் இதே நிறுவனம் கூல்பேட் நோட் 3 லைட் எனும் கருவியை ரூ.6,999க்கு வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிப்செட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

லீஈகோ லீ1எஸ்

லீஈகோ

சீனாவை சேர்ந்த புதிய நிறுவனம் தான் லீஈகோ. தலைசிறந்த கைரேகை ஸ்கேனர் கொண்ட லீஈகோ லீ1எஸ் கருவி இந்தியாவில் ரூ.10,999க்கு வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் ஃபுல்எச்டி திரை, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர், 3ஜிபி ரேம், 13 எம்பி மற்றும் 5 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

லெனோவோ கே4 நோட்

லெனோவோ

இந்தியாவில் ரூ.11,999க்கு வெளியான இந்த கருவியில் 5.5 இன்ச் திரை, ஆக்டாகோர் பிராசஸர், 3 ஜிபி ரேம், 13 மற்றும் 5 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஹானர் 5எக்ஸ்

ஹானர்

5.5 இன்ச் திரை, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர், 16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் 13 மற்றும் 5 எம்பி கேமரா போன்ற அம்சங்கள் கொண்ட இந்த கருவியானது இந்தியாவில் ரூ.12,999க்கு வெளியிடப்பட்டுள்ளது.

பானாசோனிக் எலுகா மார்க்

பானாசோனிக்

இந்தியாவில் ரூ.11,990க்கு வெளியாகியிருக்கும் இந்த கருவியில் 5.5 இன்ச் திரை, குவால்காம் ஸ்னாப்டிராகன் ஆக்டாகோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் 13 எம்பி மற்றும் 5 எம்பி கேமரா போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Best phones under Rs 15,000 with fingerprint scanners Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்