Home
Mobile

அசத்தும் OnePlus.. மிரட்டும் Motorola.. மிட்-ரேன்ஜ் பிரிவில் அடிச்சு தூக்கும் 4 போன்கள்.. என்னென்ன மாடல்கள்?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், ரூ 35,000 க்குள் என்கிற விலை வரம்பானது மிகவும் "தந்திரமான" ஒரு விலைப் பிரிவாகும். ஏனெனில் இந்த விலை வரம்பிற்கு மேலே செல்லும் எந்தவொரு ஸ்மார்ட்போனுமே அப்பர் மிட்-ரேன்ஜ் பிரிவின் (Upper Mid-range Segment) கீழ் சேர்ந்துவிடும்.

அறியாதோர்களுக்கு, ரூ.10,000 முதல் ரூ.20,000க்குள் வாங்க கிடைக்கும் போன்களை பட்ஜெட் (Budget) பிரிவின் கீழ் சேர்க்கலாம்; அதேபோல ரூ.20,000 முதல் ரூ,35,000க்குள் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களை மிட்-ரேன்ஜ் (Mid-range) மாடல்கள் என்று பிரிக்கலாம். அதுவே அப்பர் மிட்-ரேன்ஜ் என்றால் ரூ.35,000 க்கு மேல் என்கிற பட்ஜெட் ஆகும்.

மிட்-ரேன்ஜ் பிரிவில் அடிச்சு தூக்கும் 4 போன்கள்!

பெரும்பாலான வாடிக்கையாளர்களின் கவனம் மிட்-ரேன்ஜ் பிரிவின் மீது மட்டுமே உள்ளது. ஏனென்றால், பிரீமியம் / பிளாக்ஷிப் போன்களில் (Premium / Flagship Phones) உள்ள சில பெரிய-பெரிய அம்சங்களை வழங்கும் பிரிவாக இது உள்ளது. அப்படியாக மிட்-ரேன்ஜ் பிரிவில் அடிச்சு தூக்கும் 4 ஸ்மார்ட்போன்களின் (Best Phones Under 35000) பட்டியல் இதோ:

1. ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G): இது மிகவும் அழகாக, அதேசமயம் ஒரு ஆடம்பரமான லுக்கை வழங்கும் ஒரு மாடலாகும். இது பிளாட் 120ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்பிளே, அலெர்ட் ஸ்லைடர், ஆக்ஸிஜென்ஓஎஸ் 13, 5000எம்ஏஎச் பேட்டரி, 16ஜிபி வரை ரேம் போன்ற முக்கிய அம்சங்களுடன் வருகிறது.

மிட்-ரேன்ஜ் பிரிவில் அடிச்சு தூக்கும் 4 போன்கள்!

ஒட்டுமொத்தமாக, ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,000 க்குள் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்களிலேயே.. மிகவும் வேகமான மற்றும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாகும். இது ரூ.33,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும்.

2. ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி (iQOO Neo 7 Pro 5G): இது மிகவும் சக்திவாய்ந்த சிப்செட்களில் ஒன்றான ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப் உடன் வரக்கூடிய மிகவும் மலிவான ஸ்மார்ட்போனாகும். கூடவே இது பிளாட் AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 5000எம்ஏஎச் பேட்டரி, பெஸ்ட் கேமரா செட்டப்பையும் கொண்டுள்ளது.

மிட்-ரேன்ஜ் பிரிவில் அடிச்சு தூக்கும் 4 போன்கள்!

ஒட்டுமொத்தமாக, ஐக்யூ நியோ 7 ப்ரோ மாடலானது வெண்ணிலா வேரியண்ட் ஆன ஐக்யூ நியோ 7 ,மாடலை விட சிறப்பாக உள்ளது, மேலதிக அம்சங்களுடன் இது இன்னும் வேகமாகவும் வேலை செய்கிறது. இது ரூ.32,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும்.

3. மோட்டோரோலா எட்ஜ் 40 5ஜி (Motorola Edge 40 5G): இந்த போனின் சிறப்பு என்னவென்றால், பொதுவாக அதிக விலையுள்ள போன்களில் மட்டுமே காணப்படும் சில அம்சங்கள் இதில் உள்ளன. இது ஒரு மெட்டல் ஃபிரேமை கொண்டுள்ளது. கூடவே கிளாஸ் அல்லது வேகன் ஸ்கின் பேக் பேனலை தேர்வு செய்யும் விருப்பமும் உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. எல்லாவற்றை முக்கியமாக இது 15W வயர்லெஸ் சார்ஜிற்கான ஆதரவையும் வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக, க்ளீன் ஆன ஆண்ட்ராய்டு இன்டர்பேஸுடன் கூடிய வேகமான மற்றும் பயன்படுத்த எளிதான ஒரு ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க விரும்பினால் இதுவே பெஸ்ட் ஆப்ஷன். இது 26,999 க்கு (8ஜிபி ரேம் + 256 ஜிபி) வாங்க கிடைக்கிறது.

4. போக்கோ எஃப்5 5ஜி (Poco F5 5G): இந்த பட்டியலில் கடைசியாக உள்ள போக்கோ எஃப்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது "கொடுக்குற காசுக்கு ஏற்ற" ஒரு ஸ்மார்ட்போனாகும். இது 120 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்பிளே, சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 2 சிப், 5000எம்ஏஎச் பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற முக்கிய அம்சங்களுடன் வருகிறது. இது ரூ.23,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Best Phones Under 35000 Oneplus Iqoo Motorola Poco Nov 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X