இந்த அக்டோபரில்.. இந்தியாவில் அறிமுகமாகும் 7 பெஸ்ட் போன்களும், அவற்றின் விலைகளும்!

|

கடந்த செப்டம்பர் மாதத்தின் முதல் பாதியில், ஏராளமான புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருந்தாலும் கூட, இரண்டாம் பாதியில் பெரிய அளவில் எந்த ஸ்மார்ட்போனும் அறிமுகமாகவில்லை.

ஏனென்றால், பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை கால சிறப்பு விற்பனைகளிலேயே அதிக கவனம் செலுத்தின.

ஆனால் 2022 அக்டோபர் அப்படி இருக்கப்போவதில்லை!

ஆனால் 2022 அக்டோபர் அப்படி இருக்கப்போவதில்லை!

மடை திறந்து விடுவதை போல, இந்த 2022 அக்டோபர் மாதத்தில் எக்கச்சக்கமான ஸ்மார்ட்போன்கள், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

அப்படியாக, இந்த மாதம் இந்தியாவில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும்? அவைகளின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? என்கிற விவரங்கள் இதோ:

வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ! 2 வாங்கலாம் போலயே!வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ! 2 வாங்கலாம் போலயே!

01. கூகுள் பிக்சல் 7  - எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.60,000

01. கூகுள் பிக்சல் 7 - எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.60,000

கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதை ஏற்கனவே உறுதி செய்துள்ளது.

அந்த சீரீஸின் கீழ் வரும் வெண்ணிலா மாடல் ஆன கூகுள் பிக்சல் 7 ஆனது இந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

02. கூகுள் பிக்சல் 7 ப்ரோ - எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.75,000

02. கூகுள் பிக்சல் 7 ப்ரோ - எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.75,000

கூகுள் பிக்சல் 7 சீரீஸின் வெண்ணிலா மாடலை போலவே, ப்ரோ மாடலும், அதாவது கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனும் இந்த அக்டோபர் 2022-இல் உலக சந்தைகளிலும் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இது 50எம்பி + 12எம்பி அல்ட்ராவைடு கேமரா + 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 48எம்பி டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அலெர்ட்! Jio, Airtel-ஐ விட்டு.. திடீர்னு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்! ஏன்?அலெர்ட்! Jio, Airtel-ஐ விட்டு.. திடீர்னு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்! ஏன்?

03. ஒன்பிளஸ் நோர்ட் 3 - எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.33,000

03. ஒன்பிளஸ் நோர்ட் 3 - எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.33,000

கடந்த சில வாரங்களாக லீக்ஸ் தகவல்களில் சிக்கி வரும் OnePlus Nord 3 ஆனது, ஒன்பிளஸ் இந்தியா நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக இந்த அக்டோபர் 2022-இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 3 ஆனது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

04. ஒப்போ ஏ77எஸ் - எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.20,000

04. ஒப்போ ஏ77எஸ் - எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.20,000

ஒப்போ நிறுவனம், இந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் ஒரு புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அது MediaTek Helio G35 ப்ராசஸர், 5000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றவைகளை பேக் செய்யும் ஒப்போ ஏ77எஸ் மாடலாக இருக்கலாம்.

05. போக்கோ எம்5எஸ் - எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.16,000

05. போக்கோ எம்5எஸ் - எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.16,000

நினைவூட்டும் வண்ணம், போக்கோ எம்5எஸ் ஆனது சமீபத்தில் தான் உலகளாவிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அக்டோபர் 2022 இல் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும்.

இது 6.43-இன்ச் டிஸ்பிளே, MediaTek Helio G95 ப்ராசஸர், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 13, 64எம்பி + 8எம்பி + 2எம்பி + 2எம்பி என்கிற குவாட் ரியர் கேமரா செட்டப், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.

06. விவோ வி25இ - எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.22,000

06. விவோ வி25இ - எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.22,000

இந்தியாவில் Vivo V25 மற்றும் Vivo V25 Pro மாடல்களை அறிமுகம் செய்த கையோடு, இந்த பிராண்ட் அதன் Vivo V25e ஸ்மார்ட்போனையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இது MediaTek Helio G99 ப்ராசஸர், 64MP + 2MP + 2MP என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா, 32MP செல்பீ கேமரா, 4,500mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு போன்ற முக்கிய அம்சங்களை வழங்கலாம்.

உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?

07. சியோமி 12டி ப்ரோ - எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.60,000

07. சியோமி 12டி ப்ரோ - எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.60,000


சியோமி 12T ப்ரோ ஸ்மார்ட்போனும் இந்த அக்டோபர் 2022-இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது Qualcomm Snapdragon 8+ Gen 1 ப்ராசஸர் மூலம் இயக்கப்படும். மேலும் இது 200MP மெயின் கேமராவை கொண்டிருக்கும் சியோமி நிறுவனத்தின் முதல் உலகளாவிய ஸ்மார்ட்போனாகவும் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Best Smartphones Launching In October 2022 in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X