Home
Mobile

பஞ்ச பாண்டவர்கள் மாதிரி.. ரூ.15,000 பட்ஜெட்டில் பெஸ்ட் 5G போன்கள்.. டாப் 5 லிட்ஸ்!

நீங்கள் ரூ.15,000 பட்ஜெட்டில் பெஸ்ட் பர்பாமென்ஸ் 5ஜி போன்களை தேடிக் கொண்டிருந்தால், சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி, போக்கோ எம்4 ப்ரோ 5ஜி, சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி, ரெட்மி 11 பிரைம் 5ஜி, ரியல்மி நார்சோ 50 ஆகிய 5 போன்களே பக்கா சாய்ஸாக இருக்கும். இந்த போன்களின் முழு அம்சங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ரெட்மி 11 பிரைம் 5ஜி (Redmi 11 Prime 5G) : இந்த போன் 6.58 இன்ச் ஃபுல் ஹெச்டிபிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 90Hz ரெப்ஃரஷ் ரேட்டுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 12 உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 700 ப்ராசஸர் வருகிறது. 4 ஜிபி ரேம் 64 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது.

பஞ்ச பாண்டவர்கள் மாதிரி.. ரூ.15,000 பட்ஜெட்டில் பெஸ்ட் 5G போன்கள்!

18W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000 mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் விலையை பொறுத்த வரையில் ரூ.13,249 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குரோம் சில்வர் ( Chrome Silver), மியேடோவ் கிரீன் (Meadow Green), தண்டர் பிளாக் ( Thunder Black) ஆகிய கலர்களின் விற்பனைக்கு கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி (Samsung Galaxy M14): இந்த சாம்சங் போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டிபிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 உடன் எக்னினோஸ் 1330 ப்ராசஸர் வருகிறது. 4 ஜிபி ரேம் - 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மற்றும் 6 ஜிபி ரேம் - ஜிபி 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் என விற்பனைக்கு வருகிறது.

25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் 6,000mAh பேட்டரி வருகிறது. 50 எம்பி மெயின் + 2 எம்பி டெப்த் சென்சார் + 2 எம்பி மேக்ரோ உடன் டிரிபிள் கேமரா செட்டப் கொண்டுள்ளது. செல்பீ கேமரா 13 எம்பியாக உள்ளது. லைட் ப்ளூ ( Light Blue), நேவி ப்ளூ (Navy Blue), சில்வர் (Silver) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த 5ஜி போனின் ஆரம்ப விலை ரூ.14,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 50 5ஜி ( Realme Narzo 50): இந்த ரியல்மீ போன் 120Hz ரெப்ஃரஷ் ரேட் கொண்ட 6.6 இன்ச் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. 4 ஜிபி ரேம் 128 ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. ஆண்டிராய்டு 11 உடன் மீடியாடெக் ஹீலியோ ஜி96 ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 5000 mAh பேட்டரி 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. இந்த போனின் விலை ரூ.14,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஸ்பீடு ப்ளு (Speed Blue), ஸ்பீடு பிளாக் ( Speed Black) ஆகிய கலர்களின் கிடைக்கிறது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி (Poco M4 Pro 5G): இந்த போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டிபிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 810 ப்ராசஸர் வருகிறது. 4 ஜிபி ரேம் - 64 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா, 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த போக்கோ போனின் விலையை பொறுத்தவரை ரூ.14,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ( Samsung Galaxy M13): இந்த போன் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டிபிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டது. ஆண்ட்ராய்டு 12 உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 700 ப்ராசஸர் இருக்கிறது. 4 ஜிபி ரேம் - 64 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த சாம்சங் போனின் விலையை பொறுத்தவரையில் ரூ.12,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Performance 5G Phone Under Rs 15000 in India With Realme Narzo 50, Redmi 11 Prime, Samsung M14 and Poco M4 Pro
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X