Home
Mobile

1 இல்ல.. 2 ஆப்ஷன் இருக்கு.. ரூ.20,000 க்குள் கிடைக்கும் OnePlus போன்.. எந்த மாடலை நம்பி வாங்கலாம்?

உங்களிடம் ரூ.20,000 என்கிற பட்ஜெட்டும், அதை வைத்து ஒரு நல்ல ஒன்பிளஸ் போனை வாங்க வேண்டுமென்கிற ஆசையும் இருந்தால்.. உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளன. அதென்ன மாடல்கள்? இந்த 2 போன்களின் நிறைகள் மற்றும் குறைகள் என்ன? எதை நம்பி வாங்கலாம்? இதோ விவரங்கள்:

இப்போதைக்கு ரூ.20,000 க்கு கீழ் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஒன்பிளஸ் போன்கள் என்றால் அவைகள் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி (OnePlus Nord CE 2 Lite 5G) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G) மாடல்களே ஆகும்.

1 இல்ல.. 2 ஆப்ஷன் இருக்கு.. ரூ.20,000 க்குள் கிடைக்கும் OnePlus போன்!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி-யின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.59-இன்ச் எஃப்எச்டி+ டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா, 33W சூப்பர்வூக் வயர்டு சார்ஜிங் உடனான 5,000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி-யின் நிறைகளை பற்றி பேசும் போது, இது நல்ல வடிவமைப்பை (Good Design) பெற்றுள்ளது. கூடவே இது நல்ல பேட்டரி லைஃப்பையும் (Good Battery Life) வழங்குகிறது. சுவாரசியமாக இது 5ஜி ஆதரவுடன் (5G Support) வருகிறது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் க்ளீன் ஆன யூஸர் இன்டர்பேஸையும் (Clean UI) வழங்குகிறது.

குறைகளை பற்றி பேசும் போது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் கேமராக்கள் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. குறிப்பாக இதன் இரண்டாம் நிலை (2எம்பி கேமரா) மற்றும் மூன்றாம் நிலை (2எம்பி டெப்த் சென்சார்) கேமராவானது ஈர்க்கக்கூடிய அவுட்புட்களை வழங்கவில்லை.

அடுத்ததாக நீங்கள் ஒரு மொபைல் கேமர் என்றால், இது உங்களுக்கான ஸ்மார்ட்போன் இல்லை; நீங்கள் வேறு ஏதாவது ஒரு கேமிங் ஸ்மார்ட்போனை தேட ஆரம்பிக்கலாம். கடைசியாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இல்லை. ஹெட்போன்ஸ் அல்லது இயர்பர்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு இதுவொரு பெரிய குறையாக இருக்காது; மற்றவர்களுக்கு நிச்சயம் இதுவொரு குறைதான்!

அடுத்தாக உள்ள ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி-யின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 120 ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடக்ஷன் உடனான 6.72-இன்ச் எஃப்எச்டி+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை இஐஎஸ் (EIS) சப்போர்ட் உடனான 108எம்பி சாம்சங் எச்எம்6 சென்சார் மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமராவை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது . கடைசியாக இது 67W சூப்பர்வூக் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

எப்படி பார்த்தாலும் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி மாடலை விட நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஆனது நல்ல-நல்ல அம்சங்களை கொண்டுள்ளது. இந்த இடத்தில் தான் விலை நிர்ணயம் ஒரு முக்கியமான விஷயமாக மாறுகிறது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி மாடலானது ரூ.17,999 க்கும், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி மாடலானது ரூ19,999 க்கும் வாங்க கிடைக்கின்றன.

அதாவது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஆனது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி-ஐ விட ரூ.2000 அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. உண்மையில் இது தான் ஒப்பீட்டளவில் பெஸ்ட் ஆக உள்ளது. இருப்பினும் இதுவும் கூட மற்ற எல்லா ஸ்மார்ட்போன்களை போலவே தனக்கான சொந்த நிறைகள் மற்றும் குறைகளை கொண்டுள்ளது.

நிறைகளை பொறுத்தவரை, இது நல்ல வடிவமைப்பை பெற்றுள்ளது; தரமான ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது; க்ளீன் ஆன யூஸர் இன்டர்பேஸை வழங்குகிறது மற்றும் போதுமான பேட்டரி லைஃப்பை உறுதி செய்கிறது. குறைகளை பற்றி பேசும்போது, இதன் கேமராக்கலும் கூட பெஸ்ட் ஆக இல்லை மற்றும் இது எல்சிடி டிஸ்பிளேவை பேக் செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best OnePlus Phones under 20000 Nord CE 2 Lite 5G Vs Nord CE 3 Lite 5G Check Pros Cons Which is Best
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X