இந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சாதனங்களையும், புதிய சலுகைகளையும் அறிவித்த வண்ணம் உள்ளது. அதன்படி இந்நிறுவனம் சாம்சங் புளூ ஃபெஸ்ட் சேல் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது, குறிப்பாக ஆறு நாட்கள் சிறப்பு விறப்னை நவம்பர் 19-ம் தேதி நிறைவு பெற இருக்கிறது.

சாம்சங் எம்10எஸ்
மேலும் சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையின் கீழ் ஸ்மாhர்ட்போன் மற்றும் அக்சஸரீக்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி சாம்சங் எம்10எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000-விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ரூ.42,999-விலையிலும், கேலக்ஸி எஸ்9 ரூ.29,999-விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் அறிவித்துள்ள இந்த விலைகுறைப்பு தவிர, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி சாம்சங்சாதனங்களை வாங்கினால் 10சதவிகிதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் சாம்சங் அக்சஸரீக்களைசிறப்பு விலையில் வாங்க முடியும் என சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்5இ, வயர்லெஸ் சார்ஜர்,கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ், ஸ்டிராப் காம்போக்கள், ஏ.கே.ஜி. வை500 ஹெட்செட், கேலக்ஸி ஃபிரெண்ட்ஸ் கவர், க்ளியர் வியூ போன்ற சாதனங்களை சிறப்பு விலையில் வாங்கிட முடியும். குறிப்பாக சாம்சங் புளூ ஃபெஸட் சேல் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் மட்டும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சாம்சங் நிறவனத்தின் இரு ஸ்மார்ட்போன்களை வாங்கும் ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு 7.5 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பின்பு கேலக்ஸி வாட்ச் 42எம்எம் மாடல் ரூ.19,99-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications