Home
Mobile

வாங்கச் சிறந்த தரமான Nokia பீச்சர் போன்கள்: இதோ பட்டியல்..!

எச்எம்டி குளோபல் நிறுவனம் தரமான பீச்சர் போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. இப்போது கூட இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் பீச்சர்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

பீச்சர் போன்

மற்ற நிறுவனங்களை கம்மி விலையில் எச்எம்டி குளோபல் நிறுவனம் பீச்சர் போன்களை அறிமுகம் செய்வதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் இந்தியாவில் வாங்கக் கிடைக்கும் நோக்கியா நிறுவனத்தின் தரமான பீச்சர் போன்களை இப்போது பார்ப்போம்.

1.நோக்கியா 2660 பிளிப் போன்

1.நோக்கியா 2660 பிளிப் போன்

நோக்கியா 2660 பிளிப் போன் மாடலை ரூ.4699-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் நோக்கியா இணையத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 2660 பிளிப் போன் ஆனது Series 30+ இயங்குதளத்தை கொண்டுள்ளது. எனவே இதை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். நோக்கியா 2660 பிளிப் போன் ஆனது 2.8-இன்ச் QVGA பிரைமரி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போனில் 1.77-இன்ச் QQVGA அவுட்சைடு டிஸ்பிளே கூட உள்ளது.

நோக்கியா 2660 பிளிப் போன் பேட்டரி

நோக்கியா 2660 பிளிப் போன் பேட்டரி

வயர்டு மற்றும் வயர்லெஸ் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் எஃப் ரேடியோ ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். பின்பு எம்பி3 பிளேயர்,புளூடூத் வி4.2, 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் போன்ற அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா 2660 பிளிப் பீச்சர் போன்.

ஸ்னேக், கிராஸி ரோடு, டெட்ரிஸ், ஆரோ மாஸ்டர் உள்ளிட்ட கேம்களை கொண்டுள்ளது புதிய நோக்கியா பீச்சர்போன். இந்த நோக்கியா 2660 பிளிப் போனில் 1450 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

2.நோக்கியா 8210 4ஜி

2.நோக்கியா 8210 4ஜி

நோக்கியா 8210 4ஜி மாடலை அமேசான் தளத்தில் ரூ.3,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த பீசசர் போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது நோக்கியா 8210 4ஜி ஃபீச்சர் போன் 2.8' இன்ச் அளவு கொண்ட QVGA டிஸ்பிளே உடன் வருகிறது. இந்த புதிய சாதனம் Unisoc T107 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

குறிப்பாக Nokia 8210 4G ஃபீச்சர் போன் ஆனது 1,450mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. நெட்வொர்க்கில் 6 மணிநேர டாக் டைம் நேரத்தை வழங்குகிறது. அதேபோல், 27 நாட்கள் வரை ஸ்டான்பை நேரத்தையும் வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.

நோக்கியா 8210 4ஜி சிப்செட்

நோக்கியா 8210 4ஜி சிப்செட்

நோக்கியா 8210 4ஜி ஆனது Unisoc T107 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. நோக்கியா 8210 4ஜி டிவைஸ் 128MB ரேம் மற்றும் 48MB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் ஸ்டோரேஜை 32ஜிபி வரை விரிவாக்கக் கூடிய ஆதரவும் இதில் உள்ளது.

Nokia 8210 ஆனது வயர்லெஸ் FM ஸ்ட்ரீமிங் ஆதரவை வழங்குகிறது. இந்த புதிய டிவைஸ் MP3 பிளேயரையும் கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

3. நோக்கியா 5310

3. நோக்கியா 5310

டூயல் சிம் ஆதரவு கொண்ட நோக்கியா 5310 போனை அமேசான் தளத்தில் ரூ.3,349-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த பீச்சர் போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.அதாவது நோக்கியா 5310 போனில் பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், எம்பி 3 பிளேயர், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ மற்றும் டூயல் ஃபிரண்ட் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

நம்பகமான உறுதியுடன், ஸ்டான்பை மோடில் 30 நாட்கள் வரை நீடித்து நிலைக்கும் 1,200 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது நோக்கியா 5310 போன். பின்பு 2.4' இன்ச் QVGA டிஸ்பிளே, T9 கீ-போர்டு மீடியாடெக் எம்டி 6260 ஏ சிப்செட், 8 எம்பி ரேம் மற்றும் 16 எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்ற
அட்டகாசமான வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த நோக்கியா போன்.


மேலும் நோக்கியா சீரிஸ் 30+ OS, சிங்கிள் விஜிஏ கேமரா, டூயல் டோன் சைடு கண்ட்ரோலர் பட்டன்கள், 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா 5310 மாடல்.

4.நோக்கியா 105 பிளஸ்

4.நோக்கியா 105 பிளஸ்

நோக்கியா 105 பிளஸ் மாடலை அமேசான் தளத்தில் ரூ.1,399-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த பீச்சர் போன் 1.77-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் சார்ஜ் செய்ய மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் மற்றும் 3.5மி.மீ ஆடியோ ஜாக் வசதியும் இதில் உள்ளன.

மேலும் இந்த நோக்கியா போன் வயர்லெஸ் எஃப்எம் ஸ்ட்ரீமிங் ஆதரவையும் வழங்குகிறது. குறிப்பாக இதன் பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆக சுமார் 1.5 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது. பின்பு 12 மணி நேரம் டாக்டைம், 18 நாட்கள் வரை standby time-ஐ வழங்குகிறது இந்த புதிய நோக்கியா போன்.

இதில் உள்ள இன்பில்ட் மெமரி ஆனது 2000 காண்டாக்ட் மற்றும் 500 SMS செய்திகள் சேமிக்கப் பயன்படும். அதேபோல் ஸ்னேக் போன்ற கிளாசிக் கேம்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான போன்.

5.நோக்கியா 110 4ஜி

5.நோக்கியா 110 4ஜி

டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் சீரிஸ் 30+ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த நோக்கியா 110 4ஜி மாடல். குறிப்பாக இந்த போனை அமேசான் தளத்தில்ரூ.2,899-விலையில் வாங்க முடியும். அதேபோல் 1.8-இன்ச் QQVGA டிஸ்பிளே மற்றும் 120x160 பிக்சல்கள் அடிப்படையில் வெளிவந்துள்ளது இந்தஅட்டகாசமான நோக்கியா 110 4ஜி மாடல்.

Unisoc T107 SoC பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா மாடல். குறிப்பாக நோக்கியா 110 4ஜி சாதனத்தின் பின்புறம் ஒரு கேமரா சென்சார் வசதி உள்ளது. பின்பு இதில் mp3பிளேயர் ஆதரவும் உள்ளது. மேலும் நோக்கியா 110 4ஜி மாடலில் எஃப்எம் ரேடியோவுடன் wireless mode வசதியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Best Nokia feature phones to Buy in India: Here's the List: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X