Nokia-னா சும்மாவா? UPI.. 1450எம்ஏஎச் பேட்டரி.. கம்மி விலையில் கிடைக்கும் சிறந்த 4G போன்கள்..
இந்தியாவில் இப்போதும் நோக்கியா (Nokia) பீச்சர் போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் நீண்ட வருடங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் சிறந்த தரம் மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் இந்த நோக்கியா போன்கள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இப்போது இந்தியாவில் கம்மி விலையில் கிடைக்கும் சிறந்த மூன்று நோக்கியா 4ஜி பீச்சர் போன்களை இங்கே பார்க்கலாம்.
நோக்கியா 235 4ஜி டிஎஸ் (Nokia 220 DS 4G) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.3,559 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது.

64எம்பி ரேம் மற்றும் 128எம்பி இன்பில்ட் ஸ்டோரேஜு க்கான ஆதரவுடன் யுனிசாக் டி107 சிப்செட் மூலம் இந்த நோக்கியா 235 4ஜி டிஎஸ் போன் இயங்குகிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக ஸ்டோரேஜ் திறனை 32ஜிபி வரை விரிவாக்கவும் முடியும். மேலும் இந்த போன் எஸ்30+ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.
நோக்கியா 235 4ஜி டிஎஸ் ஆனது 2 மெகாபிக்சல் ரியர் கேமரா சென்சார் உடன் வருகிறது. மேலும் இந்த போன் 1450mAh நீக்கக்கூடிய பேட்டரியை பேக் செய்கின்றன மற்றும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்களை கொண்டுள்ளன. 3.5மிமீ ஆடியோ ஜாக், எம்பி3 பிளேயர் ஆதரவு, வயர்லெஸ் எப்எம் ரேடியோ ஆதரவுகளும் இதில் உள்ளன. அதேபோல் யுபிஐ ஆதரவை பொறுத்தவரை இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (NPCI) அங்கீகரிக்கப்பட்ட யுபிஐ (UPI) ஆப் உடன் ப்ரீ-இண்ஸ்டால்டு செய்யப்பட்டுள்ளன. பின்பு 4G வோல்ட்இ, ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா 235 4ஜி டிஎஸ் போன்.
நோக்கியா 110 4ஜி டூயல் சிம் (Nokia 110 4G Dual Sim) போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2329 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.
1.8-இன்ச் டிஸ்பிளே மற்றும் QQVGA ரெசல்யூசன் வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா 110 4ஜி (2023) மாடல். குறிப்பாக 2ஜி, 3ஜி, 4ஜி நெட்வொர்க் ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா ஃபீச்சர் போன். மேலும் இந்த நோக்கியா 110 4ஜி (2023) போன் எஸ்30 பிளஸ் இயங்குதளத்தை (ஓஎஸ்) கொண்டு வெளிவந்துள்ளது.
அதேபோல் யுபிஐ பேமெண்ட் (UPI Payment) வசதி, புளூடூத் 5.0, 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், மைக்ரோ யுஎஸ்பி 2.0 உள்ளிட்ட வசதிகளைக் கொண்டு இந்த நோக்கியா ஃபீச்சர் போன் வெளிவந்துள்ளது நோக்கியா 110 4ஜி மாடல். மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு, 1450 எம்ஏஎச் பேட்டரி, QVGA கேமரா ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த நோக்கியா 110 4ஜி போனில் உள்ளன.
நோக்கியா 5710 டூயல் சிம் எக்ஸ்பிரஸ் ஆடியோ (Nokia 5710 Dual Sim XpressAudio) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.5029 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.
அதேபோல் நோக்கியா 5710 டூயல் சிம் எக்ஸ்பிரஸ் ஆடியோ மொபைல் போன் பின்புறத்தில் ஸ்லைடு-டவுன் பேனலுடன் சாதாரண தோற்றமுடைய ஒரு ஃபீச்சர் போனைப் போல் காட்சியளிக்கிறது. ஆனால் இந்த போனில் இருக்கும் டிவிஸ்ட்டே இந்த ஸ்லைடரின் பின்பக்கம் ஒளிந்துள்ளது. அதாவது இதைத் திறக்கும் போது TWS இன் ஒரு ஜோடி இயர்பட்ஸ் கருவிகள் வெளிப்படுத்துகிறது.

எம்பி3 பிளேயர், வயர்லெஸ் எஃப்எம், Unisoc T107 சிப்செட், 2.4-இன்ச் QVGA டிஸ்பிளே வசதி, விஜிஏ கேமரா வசதி, 1450 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த நோக்கியா 5710 டூயல் சிம் எக்ஸ்பிரஸ் ஆடியோ பீச்சர் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக நம்மிடம் எவ்வளவு அருமையான ஸ்மார்ட்போன் இருந்தாலும் கூட அதன் சார்ஜ் விரைவில் தீர்ந்துவிட வாய்ப்பு உள்ளது. அதாவது கேமராக்களை அதிக நேரம் இயக்குவது, ஓடிடி-ல் படங்கள், பாடல் கேட்பது போன்றவற்றின் மூலம் ஸ்மார்ட்போனின் சார்ஜ் சில மணி நேரங்களில் தீர்ந்துவிடும். எனவே இதுபோன்ற நேரங்களில் எப்போதுமே ஒரு பீச்சர் போனை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.


Click it and Unblock the Notifications








