இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த 5 மோட்டோரோலா போன்கள்.. 50எம்பி கேமரா.. பட்டியல் இதோ..
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் பட்ஜெட் விலையில் இந்நிறுவனம் போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் ரூ.20,000-க்கு கீழ் அசத்தலான சில போன்களை வைத்துள்ளது. அந்த போன்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
1.மோட்டோரோலா ஜி96 5ஜி (MOTOROLA G96 5G) ஸ்மார்ட்போன் ரூ.17,999 விலையில் வாங்க கிடைக்கிறது. IP68 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (4nm Octa Core Snapdragon 7s Gen 2) சிப்செட் வசதியுடன் இந்த புதிய மோட்டோரோலா போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக 6.67 இன்ச் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 32எம்பி செல்பி கேமரா, அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், 5500mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா ஜி96 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது.
2. மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் 5ஜி (Motorola Edge 50 Fusion 5G) ஆனது ரூ.18,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் வெளிவந்தது.
மேலும்அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு, 6.7 இன்ச் 3டி கர்வ்ட் பிஓஎல்இடி (3D Curved pOLED) டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 5000mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்,IP68 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், 32எம்பி செல்பி கேமரா, 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் 5ஜி போன் வெளிவந்தது.
3.மோட்டோரோலா ஜி85 5ஜி (Motorola G85 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட் மற்றும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவுடன் இந்த மோட்டோரோலா ஜி85 5ஜி போன் வெளிவந்தது.
இதுதவிர 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (curved pOLED) டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 32எம்பி செல்பி கேமரா, டூயல் மைக்ரோபோன்கள், 5000mAh பேட்டரி, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங், 33W டர்போ சார்ஜிங், 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவந்தது.
4.மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) ஆனது ரூ.19,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Mediatek Dimensity 7300 chipset) சிப்செட் உடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவந்தது.

6.4-இன்ச் 1.5கே பிஒஎல்இடி டிஸ்பிளே (pOLED display), 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 32எம்பி செல்பி கேமரா, IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டூயல் ஸ்பீக்கர்கள் (Dual speakers), 4310mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
5.மோட்டோரோலா ஜி45 5ஜி (Motorola G45 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.11,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த போன் 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 5ஜி எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC) சிப்செட், 6.5 இன்ச் எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே, 50எம்பி கேமரா, 5000mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்களுடன் வெளிவந்தது.


Click it and Unblock the Notifications








