பட்ஜெட் விலையில் 4 Motorola 5ஜி போன்கள்.. 33W சார்ஜிங்.. 50MP கேமரா.. OLED டிஸ்பிளே.. விட்றாதீங்க..
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தரமான கேமரா மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் போன்களை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் தரமான போன்களை வைத்துள்ளது மோட்டோரோலா அந்த போன்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
மோட்டோரோலா ஜி85 5ஜி (Motorola G85 5G) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.17,999 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.16499 விலையில் வாங்கிவிட முடியும். குறிப்பாக 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (curved pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி85 5ஜி போன்.

அதேபோல் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், 5000mAh பேட்டரி, 33W டர்போ சார்ஜிங் வசதி, அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோரோலா ஜி85 5ஜி போன்.
மோட்டோரோலா ஜி64 5ஜி (Motorola g64 5G) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.14,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போன் ரூ.13499 விலையில் வாங்க முடியும். 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோரோலா ஜி64 5ஜி போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 சிப்செட் (MediaTek Dimensity 7025 SoC), 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 6000mAh பேட்டரி, 30W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங், டால்பி அட்மாஸ் ஆடியோ அம்சம், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner)உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மோட்டோரோலா ஜி64 5ஜி போனில் உள்ளன.
மோட்டோரோலா ஜி45 5ஜி (Motorola g45 5G) போன் ஆனது ரூ.10,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 5ஜி எஸ்ஓசி (Octa Core Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC) சிப்செட் கொண்டுள்ளது இந்த போன். மேலும் மை யுஎக்ஸ் (My UX) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது.
6.5 இன்ச் எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே, அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ், 50 எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் மோட்டோரோலா ஜி45 5ஜி போனில் உள்ளன.

மோட்டோரோலா ஜி34 5ஜி (Motorola G34 5G) ஸ்மார்ட்போன் ரூ.10,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 6.5 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி (Octa-core Snapdragon 695 5G SoC) சிப்செட் கொண்டுள்ளது இந்த போன்.
அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு, 50 எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த மோட்டோரோலா ஜி34 5ஜி போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








