2025-ல் அறிமுகமான சிறந்த Motorola 5ஜி போன்கள்.. 7000mAh பேட்டரி.. பட்ஜெட் விலை.. பட்டியல் இதோ.
மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கம் முதல் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வந்தது. அதுவும் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்த 2025-ம் ஆண்டில் அறிமுகமான சிறந்த பட்ஜெட் விலை மோட்டோரோலா போன்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
மோட்டோ ஜி67 பவர் 5ஜி (Moto G67 Power 5G) ஸ்மார்ட்போன் ஆனது கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் ரூ.16,999 விலையில் வாங்க கிடைக்கிறது. 50எம்பி சோனி டூயல் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, 7000mAh பேட்டரி, 6.7-இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட், ஆண்ட்ராய்டு 15 (Android 15) OS, 33W சார்ஜிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மோட்டோரோலா ஜி96 5ஜி (Motorola G96 5G) போன் இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, 6.67-இன்ச் டிஸ்பிளே, 5500எம்ஏஎச் பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் போன்ற அனைத்து அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் 5ஜி (Motorola Edge 60 FUSION 5G) இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் ரூ.22,990 விலையில் வாங்க கிடைக்கிறது. 50எம்பி டூயல் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, டைமன்சிட்டி 7400 சிப்செட், 5500எம்ஏஎச் பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் போன் அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
மோட்டோரோலா ஜி86 பவர் 5ஜி (Motorola g86 Power 5G) ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் ரூ.16,999 விலையில் வாங்க கிடைக்கிறது. டைமன்சிட்டி 7400 சிப்செட், 6720mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 15 OS , 33W சார்ஜிங், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது.
மோட்டோரோலா ஜி57 பவர் 5ஜி (Motorola G57 Power 5G) ஸ்மார்ட்போன் கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் ரூ.13,999 விலையில் வாங்க கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 சிப்செட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 7000mAh பேட்டரி, 6.72-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் (Motorola Edge 60 Stylus) இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் ரூ.19,999 விலையில் வாங்க கிடைக்கிறது. 50எம்பி டூயல் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்இ ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட், 6.67-இன்ச் டிஸ்பிளே, 5000எம்ஏஎச் பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
மோட்டோரோலா எட்ஜ் 60 5ஜி (MOTOROLA Edge 60 5G) ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த போன் ரூ.24,999 விலையில் வாங்க கிடைக்கிறது. 50எம்பி செல்பி கேமரா, 50எம்பி ட்ரிபிள் ரிர் கேமராக்கள், 5500எம்ஏஎச் பேட்டரி, 6.67-இன்ச் டிஸ்பிளே, டைமன்சிட்டி 7400 சிப்செட், உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








