ரூ.15,000 விலைக்குள் பெஸ்ட் Mobile.. ஒவ்வொரு மாடலும் செதுக்கி வச்ச மாதிரி இருக்கு.. யோசிக்காம வாங்க லிஸ்ட்..
புதிதாக மொபைல் போன் (Mobile) அல்லது ஸ்மார்ட்போன் (Smartphone) வாங்க திட்டமிடுகிறீர்களா? அதுவும் உங்கள் பட்ஜெட் நூல் பிடித்தார் போல ரூ. 15,000 விலையை (Budget phones under Rs 15000) தாண்டவே கூடாது என்ற எதிர்பார்ப்புடன் பெஸ்ட் ஸ்மார்ட்போன் (Best smartphone) சாதனத்தை வாங்க அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) என்று இணையம் (Internet) முழுக்க தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், இந்த பதிவு உங்களுக்கனது தான் மக்களே. ரூ. 15,000 விலைக்குள் இப்போது வாங்க கிடைக்கும் பெஸ்ட் மொபைல் மாடல்களை இந்த பதிவில் பட்டியலிட்டுள்ளோம்.
உங்கள் பட்ஜெட் ரூ. 15,000 தானா? இந்த விலை பிரிவில் பல நூறு ஸ்மார்ட்போன் சாதனங்கள் இப்போது ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. இதிலிருந்து எந்த மாடல் ஸ்மார்ட்போனை தேர்வு செய்வதென்று குழப்பமாக இருக்கிறதா? அல்லது எந்த மொபைல் உண்மையிலேயே பெஸ்ட் டிவைஸ் என்பதை கண்டறிவதில் உங்களுக்கு சிரமமாக இருக்கிறதா? அப்படியானால், யோசிக்காமல் உங்கள் தேர்வை இந்த 5 மொபைல் மாடல்கள் மீது வையுங்கள்.

ரூ.15,000 விலைக்குள் பெஸ்ட் Mobile.. யோசிக்காம வாங்க லிஸ்ட் இதோ (Best mobiles under Rs 15000):
இந்த லிஸ்ட் இல் உள்ள ஒவ்வொரு ஸ்மார்ட்போன் மாடலும் செதுக்கி வைத்தது போல, அட்டகாசமான தோற்றத்துடன், சூப்பரான அம்சங்களை பேக் செய்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள ஸ்மார்ட்போன்கள் எவை? இதன் விலை என்ன? இதன் சிறப்பம்சம் என்னென்ன? என்பதை இப்போது ஒன்றின் பின் ஒன்றாக பார்க்கலாம் வாங்க.
1. ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G):
இது சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டட் ஸ்மார்ட்போன் சாதனமாகும். இது 6.79 இன்ச் முழு HD + டிஸ்ப்ளே (Display), 8GB ரேம் (RAM) + 256GB ஸ்டோரேஜ் (Storage), 50MP + 2MP டூயல் கேமரா (Camera), 5000mAh பேட்டரி (Battery) உடன் வெறும் ரூ. 13,999 என்ற விலையுடன் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கிறது.
2. மோட்டோரோலா ஜி64 (Motorola G64):
பட்ஜெட் செக்மென்ட்டில் 6000mAh பெரிய பேட்டரியுடன் ரூ.14,999 விலையில் வரும் பெஸ்ட் மொபைல் இதான். இது 6.5" இன்ச் டிஸ்பிளே, 8GB ரேம் (RAM) + 128GB ஸ்டோரேஜ், OIS ஆதரவுடன் 50MP + 8MP ரியர் கேமரா, 16MP செல்பி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் இப்போது சலுகையுடன் வாங்க கிடைக்கிறது.
3. விவோ T3x (Vivo T3x):
இதுவும் 6000mAh பெரிய பேட்டரியுடன் அதே ரூ.14,999 விலையில் வாங்க கிடைக்கிறது. ஆனால், இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.72" இன்ச் முழு HD+ டிஸ்பிளே, 50MP + 2MP கேமரா போன்ற அம்சங்களை அடக்கியுள்ளது. இதுவும் பிளிப்கார்ட் மூலம் வாங்க கிடைக்கிறது.
4. டெக்னோ போவா 5 ப்ரோ (Tecno POVA 5 Pro):
செதுக்கி வாய்த்த சிற்பம் போல, பின்பெனலில் பேக்லைட் LED லைட் உடன் கவர்ச்சிகரமான டிஸைனுடன் ரூ. 14,999 விலையில் இந்த மொபைல் வாங்க கிடைக்கிறது. இது 6.78" இன்ச் முழு HD + டாட்-இன் டிஸ்பிளே, 50MP ரியர் கேமரா, 16MP செல்ஃபி கேமரா, 68W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை இது கொண்டுள்ளது. இது அமேசான் (Amazon) வழியாக வாங்க கிடைக்கிறது.
5. சாம்சங் கேலக்ஸி எஃப்15 5ஜி (Samsung Galaxy F15 5G):
பட்ஜெட் விலையில் ட்ரிபிள் ரியர் கேமராவுடன் ஒரு புது போன் வேண்டுமென்றால், நீங்கள் கட்டாயம் இந்த மாடலை தான் வாங்க வேண்டும். இதில் 50MP+5MP+2MP கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 13MP கேமரா, 6.5" இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளது. இது பிளிப்கார்ட் வழியாக ரூ. 14,999 விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








