ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!

|

ஸ்மார்ட்போனின் தேவைகளும், ஸ்மார்ட்போன் வழியாக நாம் செய்யக்கூடிய அன்றாட வேலைகளும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போவதால் நம்மில் பலரும் ரூ.10,000 என்கிற பட்ஜெட்டின் கீழ் வாங்க கிடைக்கும் போன்களை கருத்தில் கொள்வதே இல்லை.

ரூ.15,000 - ரூ.20,000 என்கிற பட்ஜெட் தான் இப்போதைக்கு பெஸ்ட்!

ரூ.15,000 - ரூ.20,000 என்கிற பட்ஜெட் தான் இப்போதைக்கு பெஸ்ட்!

ஏனெனில், இந்த பிரிவின் கீழ் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் ப்ராசஸர்கள் (சிப்செட்), டிஸ்ப்ளே பேனல்கள், கேமராக்கள் மற்றும் சார்ஜிங் ஸ்பீட் போன்ற அம்சங்கள் சற்றே மேம்பட்டதாகவும், ஹை-எண்ட் மாடல்களுக்கு "கொஞ்சம்" நெருக்கமாகவும் இருக்கின்றன.

Samsung, OnePlus, Xiaomi உட்பட 12 போன்கள் மீது தாறுமாறான விலைக்குறைப்பு; இதோ லிஸ்ட்!Samsung, OnePlus, Xiaomi உட்பட 12 போன்கள் மீது தாறுமாறான விலைக்குறைப்பு; இதோ லிஸ்ட்!

ஒன்பிளஸ் டூ ரெட்மி வரை!

ஒன்பிளஸ் டூ ரெட்மி வரை!

ஒருவேளை நீங்கள் இந்த 2022 இல், ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன் ஒன்றை தேடிக்கொண்டு இருந்தால் - கவலையை விடுங்கள்! ஏனெனில் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.

OnePlus, Motorola, Realme, Poco, Redmi போன்ற நிறுவனங்களிடம் இருந்து "ரூ.20,000 க்குள்" என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் 5 பெஸ்ட் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:

05. மோட்டோரோலா ஜி71 (Motorola G71)

05. மோட்டோரோலா ஜி71 (Motorola G71)

நினைவூட்டும் வண்ணம், மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான மோட்டோ ஜி71 மீது சமீபத்தில் தான் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது. இது தற்போது ரூ.15,999 முதல் வாங்க கிடைக்கிறது.

இந்த மோட்டோ ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் அளவிலான FHD+ AMOLED டிஸ்ப்ளே பேனலுடன் வருகிறது மற்றும் இது ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை இது 50MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை கொண்டுள்ள இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

பட்ஜெட் விலையில் Tablet! போட்டி போட்டு சம்பவம் செய்த Realme, Oppo!பட்ஜெட் விலையில் Tablet! போட்டி போட்டு சம்பவம் செய்த Realme, Oppo!

04. ரியல்மி 9 5ஜி எஸ்இ (Realme 9 5G SE)

04. ரியல்மி 9 5ஜி எஸ்இ (Realme 9 5G SE)

இந்த பட்டியலில் ரியல்மி 9 5ஜி ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போன் இருப்பதற்கு முக்கிய காரணம் - அதன் ஸ்னாப்டிராகன் 778G சிப்செட் தான்.

கோர் பெர்ஃபார்மென்ஸ் அடிப்படையில் இந்த பட்ஜெட் பிரிவின் கீழ் மிகவும் "சக்திவாய்ந்த" ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இதன் விலை நிர்ணயம் ரூ.19,999 ஆகும்.

கூடுதலாக இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் ஆனது 144Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கும் 6.6-இன்ச் அளவிலான எல்சிடி FHD+ டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இது 48MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் இந்த 5ஜி போன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

இது 30W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

03. போக்கோ எக்ஸ்4 ப்ரோ (Poco X4 Pro)

03. போக்கோ எக்ஸ்4 ப்ரோ (Poco X4 Pro)

போக்கோ எக்ஸ்4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டின் கீழ் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படும் மற்றொரு ஸ்மார்ட்போன் இதுவாகும்.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, போக்கோ எக்ஸ்4 ப்ரோ ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடனான 6.67-இன்ச் அளவிலான FHD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இது 64MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் ஆனது 67W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்ட 5000mAh பேட்டரியையும் வழங்குகிறது.

02. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ2 லைட் 5ஜி (OnePlus Nord CE 2 Lite 5G)

02. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ2 லைட் 5ஜி (OnePlus Nord CE 2 Lite 5G)

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ2 லைட் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000 க்குள் நீங்கள் வாங்க கூடிய 'மோஸ்ட் பீச்சர் பேக்டு' போன்களில் ஒன்றாகும், அதாவது நிறைய முக்கிய அம்சங்களை வழங்கும் ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். இதன் விலை ரூ.19,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவை கொண்ட 6.59-இன்ச் அளவிலான FHD+ LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஸ்னாப்டிராகன் 695 மூலம் இயக்கப்படுகிறது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் இந்த பட்ஜெட் விலை ஒன்பிளஸ் மாடல் ஆனது 64MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பையும் பேக் செய்கிறது.

பேட்டரி மற்றும் சார்ஜிங் டிபார்ட்மென்ட்-ஐ பொறுத்தவரை 5,000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை வழங்குகிறது.

இதுவரை வந்த எந்த OnePlus போனிலும் இதுவரை வந்த எந்த OnePlus போனிலும் "இது" இல்லை; இன்னும் 2 வாரம் தான்!

01. ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி (Redmi Note 11 Pro+ 5G)

01. ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி (Redmi Note 11 Pro+ 5G)

இந்த பட்டியலில்.. இந்த ரெட்மி ஸ்மார்ட்போனை ஒரு 'போனஸ்' என்றே எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ. 20,999 க்கு வாங்க கிடைக்கிறது அதாவது இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் வராத ஒரு மாடல் ஆகும்.
.
இருந்தாலும் நாங்கள் இதை பரிந்துரைக்கிறோம். ஏனெனில் Redmi Note 11 Pro Plus ஆனது ரூ.1000 என்கிற கூடுதல் விலையில் Mediatek Dimensity 920 சிப்செட்டுடன் வருகிறது.

மேலும் இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கும் 6.67-இன்ச் அளவிலான FHD+ AMOLED டிஸ்பிளே, 108MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், 4500mAh பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களையும் பெறுகிறது.

ரூ.15,000 அல்லது ரூ.18,000 பட்ஜெட்டில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை தேடுபவர்களுக்கு இந்த போனின் விலை சற்றே அதிகமாக (ரூ.20,999) இருக்கலாம். அவர்கள் இந்த ஸ்மார்ட்போனின் மீது அணுக கிடைக்கும் பேங்க் ஆபரை பயன்படுத்தி கொள்ளலாம்; அதன் கீழ், இந்த ரெட்மி ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.1000 வரை குறைக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Best Mobile Phones Under Rs 20000 in India From OnePlus Motorola Realme Poco Redmi Buying Guide

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X