50 எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் infinix Note 12 (2023).. ரூ.15000க்கு இப்படி ஒரு போனா?

|

Infinix Note 12 (2023) ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி, 5000 எம்ஏஎச் பேட்டரி, அமோலெட் டிஸ்ப்ளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது தோராயமாக ரூ.16,400 என்ற ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் விலைக்கு மீறிய ஏணைய அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது.

Infinix Note 12 (2023) அறிமுகம்

Infinix Note 12 (2023) அறிமுகம்

Infinix நிறுவனம் நோட் 12 தொடரில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை உலகளவில் அறிமுகம் செய்துள்ளது. அது Infinix Note 12 (2023) ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது பெரிய பேட்டரி, அமோலெட் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமராக்கள் உடன் மலிவு விலையில் அறிமுகமாகி இருக்கிறது.

Infinix Note 12 (2023) விலை

Infinix Note 12 (2023) விலை

அதாவது Infinix Note 12 (2023) ஆனது $199 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு தோராயமாக ரூ. 16,400 ஆகும்.

இன்பினிக்ஸ் நோட் 12 2023 ஆனது ஆல்பைன் ஒயிட், டஸ்கனி ப்ளூ மற்றும் வால்கானிக் க்ரே வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. நோட் 12 2023 இன் இந்திய வெளியீட்டு தேதியை இன்பினிக்ஸ் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

Infinix நோட் 12 (2023) சிறப்பம்சங்கள்

Infinix நோட் 12 (2023) சிறப்பம்சங்கள்

Infinix நோட் 12 (2023) ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட ஆதரவையும் அதிவேக செயல்திறனையும் வழங்கும். இந்த விலைப் பிரிவுக்கு ஏற்ற நியாயமான சிப்செட் இது என்று கூறலாம். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

1டிபி வரை மெமரி விரிவாக்க ஆதரவு

1டிபி வரை மெமரி விரிவாக்க ஆதரவு

Note 12 (2023) ஆனது மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனில் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருக்கிறது. 5ஜிபி வரை பயன்படுத்தாத சேமிப்பகத்தை மெய்நிகர் ரேம் ஆக பயன்படுத்த முடியும்.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

Infinix Note 12 (2023) இல் முன்னதாகவே குறிப்பிட்டது போல் பெரிய பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. Infinix Note 12 (2023) ஸ்மார்ட்போனில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடனான பெரிய அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே

முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே

இதில் 6.7 இன்ச் அளவிலான முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. டிஸ்ப்ளேயில் வாட்டர் டிராப் நாட்ச் வசதி இருக்கிறது. இதில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது ஹை ரெஸ் ஆடியோ உடன் கூடிய டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

டிரிபிள் ரியர் கேமரா ஆதரவு

டிரிபிள் ரியர் கேமரா ஆதரவு

Infinix Note 12 (2023) இல் டிரிபிள் ரியர் கேமராக்கள் இருக்கிறது. அதாவது 50 எம்பி முதன்மை கேமரா உடன் 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் ஏஐ லென்ஸ் என டிரிபிள் கேமரா வசதி உள்ளது. Infinix Note 12 (2023) ஆனது 30fps இல் 2K தெளிவுத்திறனில் வீடியோவைப் பதிவுசெய்ய முடியும். இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான XOS 10.6 மூலம் இயங்குகிறது.

ரூ.15000 விலைப் பிரிவில் அறிமுகமான ஸ்மார்ட்போன்

ரூ.15000 விலைப் பிரிவில் அறிமுகமான ஸ்மார்ட்போன்

இந்த ஸ்மார்ட்போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலை நிறுவனம் இதுவரை பகிரவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யும் போது சிறந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.15000 விலைப் பிரிவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருக்கிறது. இன்னும் சில தினங்கள் மட்டும் காத்திருந்தால் இந்த ஸ்மார்ட்போன் இந்திய வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Best Midrange Smartphone: Infinix Note 12 (2023) With Mediatek Helio Chipset Launched

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X