ரூ.8,999க்கு விற்கிறீங்களே கம்பெனிக்கு கட்டுமா பாஸ்: உச்ச அம்சங்கள் உடன் அறிமுகமான Infinix Hot 20 Play!
Infinix நிறுவனம் கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் புதிய Infinix Hot 20 Play ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பெரிய பஞ்ச் ஹோல் டிஸ்பளே மற்றும் 7ஜிபி வரையிலான ரேம் விரிவாக்க ஆதரவு இருக்கிறது. மலிவு விலையில் மேம்பட்ட அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான தேர்வாக இருக்கும்.

Infinix Hot 20 Play
Infinix Hot 20 Play ஸ்மார்ட்போனானது இந்தியாவில் மலிவு விலை ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பெரிய 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் டூயல் கேமரா ஆதரவைகளைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 6,000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

Infinix Hot 20 Play விலை
ரூ.10,000க்கு கீழ் விலையில் நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக இது அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது Infinix Hot 20 Play ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.8,999 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது அரோரா க்ரீன், பேண்டஸி பர்பில், லூனா ப்ளூ மற்றும் ரேசிங் ப்ளாக் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் அறிமுகமாகி இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை டிசம்பர் 6 ஆம் தேதி பிளிப்கார்ட்டில் தொடங்க இருக்கிறது.

Infinix Hot 20 Play சிறப்பம்சங்கள்
Infinix Hot 20 Play சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 6.82 இன்ச் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே ஆதரவுடன் கிடைக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது எச்டி+ தெளிவுத்திறன் உடன் கூடிய 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. செல்பி மற்றும் பஞ்ச் ஹோல் வசதிக்கு என இதில் 8 எம்பி ஒற்றை கேமரா இடம்பெற்றிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தை பொறுத்தவரை 13 எம்பி பிரதான லென்ஸ் மற்றும் ஏஐ சென்சார் என டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. குவாட் எல்இடி ஃப்ளாஷ் அம்சமும் இதில் இருக்கிறது.

மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட்
Infinix Hot 20 Play ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ரேம் மற்றும் சேமிப்பு விரிவாக்கக்கூடிய அம்சமும் இதில் இருக்கிறது. 3ஜிபி விர்ச்சுவல் ரேம் மூலம் ரேமை 7ஜிபி வரை விரிவாக்கம் செய்யலாம். மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

6000 எம்ஏஎச் பேட்டரி
Infinix Hot 20 Play ஸ்மார்ட்போனின் பேட்டரி அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் இதில் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டிருக்கிறது. யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5எம்எம் ஹெட்போந் ஜாக் ஆதரவும் வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு ஆதரவுக்கு என கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஷியல் அன்லாக் ஆதரவு இருக்கிறது.

மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் மலிவு விலையில் ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனானது 5ஜி இணைப்புக்கான ஆதரவுடன் கூடிய MediaTek Dimensity 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் ஆனது 6nm ஃபேப்ரிகேஷன் செயல்முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்ஃபினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனும் இதே சிப்செட் மூலம் தான் இயக்கப்படுகிறது.

50 எம்பி முதன்மை கேமரா
Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனானது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. செவ்வக வடிவத்தில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் துணை ஏஐ கேமரா என டூயல் கேமரா ஆதரவு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தின் டிஸ்ப்ளேயில் வாட்டர் டிராப் நாட்ச் வசதியோடு கூடிய 8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Infinix Hot 20 5G விலை
Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனின் விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. 4ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.11,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாஸ்டர் க்ரீன், ரேசிங் பிளாக் மற்றும் ஸ்பேஸ் ப்ளூ வண்ண விருப்பத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications