5ஜி போன் இல்லையா? அப்போ உங்க காட்டில் மழைதான்! அறிமுகமானது Infinix Zero 5G 2023 சீரிஸ்!

|

Infinix Zero 5G 2023 மற்றும் Infinix Zero 5G 2023 Turbo ஆனது சீனாவின் ட்ரான்ஷன் ஹோல்டிங்ஸுக்கு சொந்தமான பிராண்டின் மூலம் 5ஜி ஆதரவோடு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய இன்ஃபினிக்ஸ் ஜீரோ ஸ்மார்ட்போனானது 6nm-அடிப்படையிலான Mediatek Dimensity SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன.

6.78 இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளே

புதிய இன்ஃபினிக்ஸ் ஜீரோ ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.78 இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. 50 எம்பி பிரைமரி சென்சார் உள்ளிட்ட டிரிபிள் ரியர் கேமரா யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் கூடிய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் பிப்ரவரி 11 முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

5ஜி போன் இல்லையா? அறிமுகமானது Infinix Zero 5G 2023 சீரிஸ்!

Infinix Zero 5G 2023 விலை

Infinix Zero 5G 2023 இன் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.17,999 எனவும் Infinix Zero 5G 2023 Turbo வேரியண்ட் இன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.19,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது கோரல் ஆரஞ்ச், பேர்லி ஒயிட் மற்றும் சப்மரைனர் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றன. Infinix Zero 5G ஸ்மார்ட்போன்கள் தற்போது பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களானது பிப்ரவரி 11 முதல் விற்பனைக்கு வரும். புதிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆனது சலுகை உடன் தொடங்குகிறது.

Infinix Zero 5G 2023 சிறப்பம்சங்கள்

Infinix Zero 5G 2023 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், Infinix Zero 5G 2023 ஆனது Infinix Zero 5G 2023 Turbo போன்றே பல அம்சங்களைக் ஒற்றுமையாகக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான XOS ஸ்கின் மூலம் இது இயக்கப்படுகிறது. டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, சிறந்த பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுகள் வழங்கப்பட்டிருக்கிறது. Infinix Zero 5G 2023 Turbo ஆனது ஜீரோ 2023 போன் போல் அல்லாமல் வேறு சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

Infinix Zero 5G 2023 மற்றும் Infinix Zero 5G 2023 Turbo ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் டூயல் நானோ சிம் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான XOS 12 மூலம் இயங்குகிறது. இதில் 6.78 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 1,080x2,460 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 60 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. பஞ்ச் ஹோல் ஆதரவைக் கொண்டிருக்கிறது ஜீரோ 2023 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்.

5ஜி போன் இல்லையா? அறிமுகமானது Infinix Zero 5G 2023 சீரிஸ்!

இரண்டும் வெவ்வேறு சிப்செட்

இரண்டு போன்களிலும் வேறு பட்டு இருப்பது அதன் சிப்செட் தான். Infinix Zero 5G 2023 ஆனது MediaTek Dimensity 920 5G SoC மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் Infinix Zero 5G 2023 Turbo ஆனது MediaTek Dimensity 1080 5G SoC மூலம் இயக்கப்படுகிறது. இதில் 8 ஜிபி ரேம் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

50 எம்பி பிரைமரி கேமரா

புதிய இன்ஃபினிக்ஸ் ஜீரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் குவாட் ரியர் ஃப்ளாஷ் உடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. கேமரா அமைப்பைப் பொறுத்தவரை இதில் 50 எம்பி பிரைமரி கேமரா மற்றும் டூயல் 2 எம்பி ஷூட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. செல்பி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என இதில் 16 எம்பி முன்புற கேமரா இடம்பெற்றிருக்கிறது. டூயல் முன்புற ஃப்ளாஷ் ஆதரவு, சூப்பர் நைட் மோட் ஆதரவு இதில் உள்ளது.

ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்

Infinix Zero 5G 2023 ஆனது 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் டர்போ பதிப்பு 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. வைஃபை, 5ஜி, ப்ளூடூத், ஜிபிஎஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுகள் இதில் வழங்கப்பட்டிருக்கிறது. கைரோஸ்கோப், ஜி-சென்சார், லைட் சென்சார் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆதரவுகளும் இதில் உள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு ஆதரவுக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆதரவுகள் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Best Low Price 5G Smartphone: Infinix Zero 5G 2023, Infinix Zero 5G 2023 Turbo Launched in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X