Home
Mobile

தூக்குங்கடா இந்த செல்லத்தை.. 2000 ரூபாய் இருந்தா போதும்.. 2024-ன் லேட்டஸ்ட் பெஸ்ட் Feature Mobile பட்டியல்..

என்ன தான் நாம் ஸ்மார்ட்போன் சகாப்தத்தில் வாழ்ந்து வந்தாலும், நமது கையில் இருக்கும் ஸ்மார்ட்போனால் இன்னும் சில நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உத்தரவாதத்தை நமக்கு அளிக்க முடியவில்லை என்பதே உண்மையாகும். குறிப்பாக, ஒரு ஸ்மார்ட்போனை நாம் ஒரு நாளுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சார்ஜ் செய்ய வேண்டியதுள்ளது. அதேபோல், ஸ்மார்ட்போன்களில் உள்ள தகவல்கள் திருடப்பட்ட அதிக வாய்ப்புள்ளது. இந்த சிக்கல்கள் எதுவுமே இல்லாமல் 4 நாள் ஆனாலும் சார்ஜ் போடாமல் நின்று பேசும் பியூச்சர் போன்களை மக்கள் இப்போது மீண்டும் நம்ப துவங்கியுள்ளனர் என்பதே நித்தசனமான உண்மை.

இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த ஆண்டில் பல புதிய பியூச்சர் போன் சாதனங்கள் இந்திய சந்தையில் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு, பியூச்சர் போன் மாடல்களின் விற்பனை உலகளவில் மெல்ல - மெல்ல அதிகரிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இதற்கு பேட்டரி சார்ஜ் மற்றும் பாதுகாப்பு அம்சம் பியூச்சர் போனில் ஸ்மார்ட்போன்களை விட சிறப்பாக அமைந்திருக்கிறது என்பதே காரணமாக கூறப்படுகிறது.

தூக்குங்கடா இந்த செல்லத்தை.. 2000 ரூபாய் இருந்தா போதும்..

ஒரு வேலை உங்களுக்கும் ஒரு புதிய பியூச்சர் போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதென்றால், இந்த 2024 ஆம் ஆண்டில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பெஸ்ட் லேட்டஸ்ட் பியூச்சர் போன் மாடல்களை இந்த பதிவில் இருந்து நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். பியூச்சர் போன் என்று சொன்னதுமே அந்த காலத்தில் இருந்து, இந்த அதிநவீன காலம் வரை, தலைசிறந்த பிராண்டாக திகழ்வது நோக்கியா (Nokia) மட்டுமே.

எச்எம்டி (HMD) நிறுவனத்திற்கு சொந்தமான நோக்கியா பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட பியூச்சர் போன் மாடல்கள் தான் முன்னிலையில் இருக்கின்றன. இதனை தொடர்ந்து அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் சாதனங்கள் முன்னிலையில் அதிக மொபைல் சாதனங்களை விற்பனை செய்து சிறந்த மாடலுக்கு தேர்வாகியுள்ளன. சரி, இப்போது எந்த பியூச்சர் போன் மாடல் என்ன விலையில் வாங்க கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

1. நோக்கியா 6310 (2024) - Nokia 6310 (2024):
இதன் அசல் விலை ரூ. 4,499
அமேசான் சலுகை விலை: ரூ. 3,299

2. நோக்கியா 5310 (2024) - Nokia 5310 (2024):
இதன் அசல் விலை ரூ. 4,299
பிளிப்கார்ட் சலுகை விலை: ரூ. 2,447

3. நோக்கியா 230 (2024) - Nokia 230 (2024):
இதன் அசல் விலை ரூ. 4,499
பிளிப்கார்ட் சலுகை விலை: ரூ. 3,688

4. நோக்கியா 110 4ஜி (2024) - Nokia 110 4G (2024):
இதன் அசல் விலை ரூ. 3,299
பிளிப்கார்ட் சலுகை விலை: ரூ. 2,384

5. நோக்கியா 108 4ஜி (2024) - Nokia 108 4G (2024):
இதன் அசல் விலை ரூ. 3,199
சலுகை விலை: ரூ. 2,299

6. ஜியோபோன் பரிமா 2 (JioPhone Prima 2):
இதன் அசல் விலை ரூ. 4,199
ரிலையன்ஸ் ஜியோ சலுகை விலை: ரூ. 2,799

மலிவு விலையில் 4ஜி இணக்கத்துடன், நீடித்து நிலைக்கும் பேட்டரி, FM ரேடியோ, அடிப்படை கேமரா, UPI வசதி, போன்ற அம்சங்களை சில பியூச்சர் போன் மாடல்களில் நீங்கள் பயன்படுத்தி மகிழலாம். புதிதாக மலிவு விலையில் புது மொபைல் வாங்க நினைத்தால் இந்த 2024 ஆம் ஆண்டில் வெளியான மாடல்களை கருத்தில்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Best and Latest Feature Phones of 2024 Includes Nokia 6310 5310 230 110 108 JioPhone Prima 2 Price Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X