Home
Mobile

2022-ல் பட்ஜெட் விலையில் கலக்கிய டாப் 5 கேமிங் ஸ்மார்போன்கள்: இப்போது கூட செம டிமாண்ட்.!

இந்தியாவில் கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கு என்றே தனி வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான சிப்செட் மற்றும் சிறந்த செயல்திறன் போன்று பல சிறப்பான அம்சங்களுடன் கேமிங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும். அதுவும் சியோமி, ரியல்மி, விவோ போன்ற நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் கேமிங் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவருகின்றன.

சிறந்த தரமான கேமிங் ஸ்மார்ட்போன்

அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனமும் சிறந்த தரமான கேமிங் ஸ்மார்ட்போன்களை இந்த வருடம் அறிமுகம் செய்துள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்த 2022-ல் கலக்கிய டாப் 5 கேமிங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி கே50

ரெட்மி கே50

ரெட்மி கே50 ஸ்மார்ட்போனுக்கு இப்போதும் கூட நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது கேமிங் பயன்பாடுகளுக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-அடிப்படையிலான MIUI 13 கொண்டு இயங்கும் ரெட்மி K50i 5ஜி ஆனது, 144Hz வரையிலான செவன்-லெவல் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 270Hz டச் சம்ப்ளிங் ரேட் உடனான 6.6-இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ (1,080x2,460 பிக்சல்கள்) LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

குறிப்பாக இந்த டிஸ்ப்ளே 20.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, HDR10 ஆதரவு, டால்பி விஷன் மற்றும் 650 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸையும் வழங்குகிறது. Redmi K50i 5G ஆனது 6P லென்ஸுடன் இணைக்கப்பட்ட 64 மெகாபிக்சல் Samsung ISOCELL GW1 மெயின் கேமரா உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. உடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டரும் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் f/2.45 அபெர்ச்சர் லென்ஸுடன் 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா உட்பொதிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி கே50 சிப்செட்

ரெட்மி கே50 சிப்செட்

ரெடமி கே50 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 8100 சிப்செட் வசதி உள்ளது. இது மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகத்தை வழங்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதேபோல் 5080 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை ரூ.23,999-விலையில் வாங்க முடியும்.

போக்கோ எப்4

போக்கோ எப்4

போக்கோ எப்4 போன் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. இதே சிப்செட் வசதி ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனில் கூட உள்ளது. குறிப்பாக கேமிங் பயன்பாடுகளுக்கு இந்த சிப்செட் மிகவும் அருமையாக உதவும். பின்பு இந்த போனின் விலை ரூ.26,999-ஆக உள்ளது.

6.67 இன்ச் ஃபுல் HD+ (1,080x2,400 பிக்சல்கள்) E4 AMOLED டிஸ்பிளே, 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 20எம்பி செல்பீ கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

IQOO Neo 6 ஸ்மார்ட்போன்

IQOO Neo 6 ஸ்மார்ட்போன்

IQOO Neo 6 ஸ்மார்ட்போன் கூட ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியைக் கொண்டு தான் வெளிவந்தது. தற்போது கூட இந்த போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.62 இன்ச் இ4 அமோலெட் டிஸ்ப்ளே, 64 எம்பி பிரதான கேமராவுடனான டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு என பல்வேறு மேம்பட்ட அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

கேம் விளையாடும் போது வெப்ப நிலையைச் சரி செய்ய திரவ குளிரூட்டும் நீராவி அறையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. மேலும். ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போனில் 80 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் 4700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

ரியல்மி ஜிடி நியோ 3

ரியல்மி ஜிடி நியோ 3

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 8100 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

குறிப்பாக இந்த போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 150 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றே கூறலாம். பின்பு இந்த போனை ரூ.36,999-விலையில் வாங்க முடியும்.

ஒன்பிளஸ் 10டி

ஒன்பிளஸ் 10டி

ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 6.7-இன்ச் டிஸ்பிளே, 4800 எம்ஏஎச் பேட்டரி, 150 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Best Gaming Smartphones of 2022: From Redmi to OnePlus: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X