Home
Mobile

யாரு சொன்னா ரூ.35000 வச்சா தான்.. நல்ல Gaming Phone கிடைக்கும்னு.. ரூ.20,000 க்குள்.. 1 இல்ல 5 ஆப்ஷன் இருக்கு!

ஒரு நல்ல கேமிங் ஸ்மார்ட்போனை வாங்க ரூ.30,000-க்கு மேல் செலவழிக்க வேண்டியிருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. பட்ஜெட் விலையிலும் கூட சில நல்ல கேமிங் போன்கள் வாங்க கிடைக்கின்றன. அப்படியாக ரூ.10,000 - ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 5 கேமிங் போன்களின் பட்டியல் இதோ:

01. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி (OnePlus Nord CE 3 Lite 5G): இது ஏன் முதல் இடத்தில் இருக்கிறதென்றால்.. இது வெறுமனே ஒரு பெஸ்ட் கேமிங் ஸ்மார்ட்போனாக மட்டுமின்றி, ரூ.20000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் கேமரா போனாகவும் உள்ளது.

ரூ.20,000 க்குள் கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் Gaming Phone-கள்!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் இஐஎஸ் (EIS) என்று சுருக்கமாக அழைக்க்கப்படும் எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic image stabilization) ஆதரவுடனான 108எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் மற்றும் 2எம்பி மேக்ரோ கேமராக்கள் உள்ளன.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் FHD+ டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13.1 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட், 67W சூப்பர்வூக் என்டூரன்ஸ் ஆதரவுடனான 5000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

ரூ.20,000 க்குள் கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் Gaming Phone-கள்!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.19,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.21,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

02. மோட்டோரோலா ஜி54 5ஜி (Motorola G54 5G): இந்த ஸ்மார்ட்போன் இரண்டாவது இடத்தில் இருக்க காரணம், இதிலுள்ள டைமன்சிட்டி 7020 சிப்செட் தான் (Dimensity 7020 Processor) தான். இது நீண்ட கால பயன்பாடு (Long-lasting usage) மற்றும் நம்பகமான செயல்திறனை (Reliable Performance) உறுதியளிக்கிறது.

ரூ.20,000 க்குள் கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் Gaming Phone-கள்!

6.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே, ஓஐஎஸ் (OIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் () ஆதரவு உடனான 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி கேமரா, 16எம்பி செல்பீ கேமரா மற்றும் ஒரு பெரிய 6000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.

03. ரியல்மி சி53 (Realme C53): இந்த ஸ்மார்ட்போன் யுனிசாக் டி61290 சிப்செட் உடன் வருகிறது. இது மென்மையான மல்டி டாஸ்கிங் மற்றும் நீடித்த பயன்பாட்டை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்,. 6.74 இன்ச் எச்டி டிஸ்பிளே, 108எம்பி மெயின் கேமரா, 18வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி முக்கிய அம்சங்களுடன் வரும் இது ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது.

04. ஐடெல் எஸ்23 பிளஸ் (itel S23 Plus): இது 8ஜிபி ரேம், மெமரி ஃப்யூஷன் மூலம் 16 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவு, 256 ஜிபி ரோம் என போதுமான ஸ்டோரேஜை வழங்குகிறது; கூடவே திறமையான கேமிங்கையும் வழங்குகிறது. 50எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.

05. விவோ டி2எக்ஸ் 5ஜி (Vivo T2x 5G): கடைசியாக டைமென்சிட்டி 6020 சிப்செட், 6.58 இன்ச் FHD+ டிஸ்பிளே, 50எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 8எம்பி செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதுவும் விலைக்கு ஏற்ற கேமிங் பெர்ஃபார்மென்ஸை வழங்குமொரு ஸ்மார்ட்போனாகும்.

Best Mobiles in India

English summary
Best Gaming Phone Under 20000 OnePlus Realme Moto Vivo itel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X