Home
Mobile

கம்மி விலையில் வாங்கச் சிறந்த பீச்சர் போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!

தற்போது ஸ்மார்ட்போன்களை போலவே பீச்சர் போன் மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக சாம்சங், நோக்கியா, லாவா போன்ற சில நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தான் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

பீச்சர் போன்கள்

குறிப்பாக இது போன்ற பீச்சர் போன்கள் சிறந்த பேட்டரி கொடுப்பதால் மக்கள் இவற்றை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது
விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் வாங்கச் சிறந்த பீச்சர் போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

நோக்கியா 5310

நோக்கியா 5310

நோக்கியா 5310 பீச்சர் போன் ஆனது டூயல் சிம் ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த பீச்சர் போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.3,349-விலையில் வாங்க முடியும்.

நோக்கியா 5310 அம்சங்கள்

நோக்கியா 5310 அம்சங்கள்

வயர்லெஸ் எப்எம் ஆதரவு, எம்பி3 பிளேயர், 1200 எம்ஏஎச் பேட்டரி, 2.4-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த நோக்கியா 5310 பீச்சர் போன். குறிப்பாக இந்த போன் அருமையான கீபோர்டு ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 சாம்சங் Guru Music 2

சாம்சங் Guru Music 2

சாம்சங் Guru Music 2 மாடலை அமேசான் தளத்தில் ரூ.2,349-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாம்சங் பீச்சர் போன் ஆனது 16ஜிபி மெமரி, 2-இன்ச் டிஸ்பிளே, 800 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின்வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

 லாவா ஜெம்

லாவா ஜெம்

லாவா ஜெம் எனும் பீச்சர் போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.1649-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த பீச்சர் போன் ஆனது 1.3எம்பி பிரைமரி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2.8-இன்ச் டிஸ்பிளே, 1750 எம்ஏஎச் பேட்டரி, தரமான கீபேட் உள்ளிட்ட பல சிறப்புஅம்சங்களை கொண்டுள்ளது இந்த லாவா மொபைல்.

மோட்டோரோலா ஏ10

மோட்டோரோலா ஏ10

டூயல் சிம் ஆதரவு கொண்ட மோட்டோரோலா ஏ10 சாதனத்தை அமேசான் தளத்தில் ரூ.1,399-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 1750 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ஏ10. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மீடியாடெக் பிராசஸர், வயர்லெஸ் எப்எம் ரேடியோ ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஏ10 மாடல்.

 Saregama Carvaan  மொபைல்

Saregama Carvaan மொபைல்

Saregama Carvaan மொபைல் மாடலை அமேசான் தளத்தில் ரூ.2,490 விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த மொபைல் 1500 Pre-Loaded Songs மற்றும் 2500 எம்ஏஎச் பேட்டரி, 2ஜிபி மெமரி, 2.4-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Best Feature Mobile Phones to Buy at Low Prices: Here's the List: full details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X