Home
Mobile

இப்படி ஒரு போனை எதிர்பார்க்கல! ரூ.14,000க்கு 5G போனை அறிமுகம் செய்து வாயடைத்த Oppo..

ஒப்போ நிறுவனம் Oppo A58x ஸ்மார்ட்போனை 5ஜி ஆதரவுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது டூயல் ரியர் கேமராக்கள், 5000 எம்ஏஎச் பேட்டரி என பல மேம்பட்ட ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது.

Oppo A58x 5G

Oppo A58x 5G

Oppo நிறுவனம் Oppo A58x 5G என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது எச்டி+ டிஸ்ப்ளே, டைமன்சிட்டி 700 சிப்செட், 13 எம்பி டூயல் கேமராக்கள் என பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது. 5ஜி ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கிறது. இதன் விலை மற்றும் பிற அம்சங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

Oppo A58x 5G விலை

Oppo A58x 5G விலை

Oppo A58x 5G விலை குறித்து பார்க்கையில், இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,200 (தோராயமாக ரூ.14,250) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ப்ரீஸ் பர்பிள், ட்ரான்க்யூல் ப்ளூ மற்றும் ஸ்டார் பிளாக் வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது.

Oppo A58x 5G சிறப்பம்சங்கள்

Oppo A58x 5G சிறப்பம்சங்கள்

Oppo A58x 5G சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 1612 x 720 பிக்சல்கள் தெளிவுத்திறன், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 600 நிட்ஸ் உச்ச பிரகாச ஆதரவுடன் கூடிய 6.5 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப் மூலம் இயக்கப்படுகிறது.

டூயல் மோட் 5ஜி நெட்வொர்க் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன். இந்த புதிய ஒப்போ போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இதில் இருக்கிறது. இதன்மூலம் 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

கேமரா அம்சங்கள்

கேமரா அம்சங்கள்

Oppo A58x 5G ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி மெயின் ஷூட்டர் லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் இதில் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா இடம்பெற்றிருக்கிறது.

ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு ஆதரவுக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இதில் வழங்கப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

புதிய Oppo A58x 5G ஆனது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 12.1 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. இணைப்பு அம்சங்களை பொருத்தவரை இதில் 5G, Wi-Fi 802.11 ac, ப்ளூடூத் 5.3, யூஎஸ்பி டைப்-சி போர்ட் என பலவகை இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

Oppo Find N2 Flip

Oppo Find N2 Flip

ஒப்போ நிறுவனம் வரும் டிசம்பர் 15-ம் தேதி புதிய Oppo Find N2 Flip எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. முதலில் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன்பின்பு தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய இன்னர் டிஸ்ப்ளே

சிறிய இன்னர் டிஸ்ப்ளே

ஒப்போ ஃபைண்ட் N2 பிளிப் போனில் சிறிய இன்னர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் 6.8-இன்ச் போல்டிங் டிஸ்பிளே மற்றும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளதாகத் தெரிகிறது. பின்பு இதன் வலது புறத்தில் வால்யூம் பட்டன்கள் உள்ளன. அதேபோல் இதன் வெளிப்புற டிஸ்பிளே மற்ற பிளிப் ரக போல்டபிள் போனை விட சற்று பெரிதாக இருக்கிறது. ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல் ஆனது 32எம்பி செல்பி கேமராவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் ஆனது 4300 எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங், 5ஜி ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Best Ever low Price 5G Smartphone Launched By OPPO: 6GB RAM, 5000mAh Battery and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X