குறைஞ்சது ரூ.5,999.. அதிக பட்சம் ரூ.8,999 தான்.. Amazon Republic Day Sale-ல் மிஸ் பண்ண கூடாத Budget Phone-கள்!
2024 ஆம் ஆண்டிற்கான அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை (Amazon Great Republic Day Sale 2024) சூடுபிடித்து விட்டது. கடந்த ஜனவரி 13 அன்று தொடங்கிய இந்த சிறப்பு விற்பனை ஜனவரி 18 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
வழக்கத்தை விட, இந்த முறை மிகப்பெரிய சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மீது எக்கச்சக்கமான ஆபர்கள் கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் பட்ஜெட் விலையில் (Budget Segment) ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால்.. இதுவே அதற்கான சரியான நேரமான இருக்கலாம்.

அப்படியாக இந்த அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் ரூ.6000 முதல் ரூ.9000 க்குள் என்கிற பட்ஜெட்டில், நீங்கள் தவற விடவே கூடாத 6 ஸ்மார்ட்போன்களை பற்றிய தொகுப்பே இது! அந்த 6 ஸ்மார்ட்போன்களின் மாடல் பெயர் என்ன? அவைகளின் பழைய விலை என்ன? எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது? ஆஃபர் விலை என்ன? இதோ விவரங்கள்:
01. ஒப்போ ஏ18 (Opoo A18): அமேசான் 2024 கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த ஒப்போ ஸ்மார்ட்போனின் மீது ரூ.6,000 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.14,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது.
02. ரியல்மி நார்சோ என்55 (Realme Narzo N55): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த ரியல்மி ஸ்மார்ட்போனின் மீது ரூ.6,000 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.14,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது.
03. ரெட்மி 13சி (Redmi 13C): அமேசான் 2024 கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த ரெட்மி ஸ்மார்ட்போனின் மீது ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.11,999 க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது.
04. ரெட்மி 12சி (Redmi 12C): அமேசான் 2024 கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த ரெட்மி ஸ்மார்ட்போனின் மீது ரூ.7,000 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.13,999 க்கு பதிலாக ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கிறது.
05. டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark Go 2024): அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த டெக்னோ ஸ்மார்ட்போனின் மீது ரூ.1,470 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.7,499 க்கு பதிலாக ரூ.6,029 க்கு வாங்க கிடைக்கிறது.
06. போக்கோ சி55 (Poco C55): அமேசான் 2024 கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த போக்கோ ஸ்மார்ட்போனின் மீது ரூ.5,500 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.11,999 க்கு பதிலாக ரூ.6,499 க்கு வாங்க கிடைக்கிறது.
07. ஐடெல் ஏ 60எஸ் (Itel A60s): அமேசான் 2024 கிரேட் குடியரசு தின விற்பனையின் போது இந்த ஐடெல் ஸ்மார்ட்போனின் மீது ரூ.2,500 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இது அசல் விலையான ரூ.8,499 க்கு பதிலாக ரூ.5,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மற்ற சலுகைகளை பொறுத்தவரை, எஸ்பிஐ கார்டு வைத்து இருப்போர்கள் இஎம்ஐ அல்லது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளின்கீழ் உடனடியாக 10 சதவீத தள்ளுபடியை பெற முடியும். அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் வெல்கம் பாயிண்ட்ஸை பெறலாம்; 5% வரை கேஷ்பேக் பெறலாம்; நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களையும் தேர்வு செய்யலாம்.
ஸ்மார்ட்போன்களை தவிர்த்து ஸ்மார்ட் டிவிகள், வாஷிங் மெஷின்கள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் லேப்டாப்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற பெர்சனல் எலக்ட்ரானிக் கேஜெட்டுகளின் மீதும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








