செல்பீ ஸ்பெஷல்.. ரூ.15,000 பட்ஜெட்டில் பெஸ்ட் கேமரா போன்கள்.. டாப் 5 லிஸ்ட்!
நீங்கள் ரூ.15,000 பட்ஜெட்டில் பெஸ்ட் கேமரா போன்களை (Phones) தேடிக்கொண்டிருந்தால், உங்களுக்கு நோக்கியா ஜி21, ரியல்மி நார்சோ 55, சாம்சங் கேலக்ஸி எம்32 பிரைம் எடிஷன், ரெட்மி 11 பிரைம், போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஆகியவை நல்ல சாய்ஸாக இருக்கும். இதுகுறித்த விவரம் இதோ.
நோக்கியா ஜி21 (Nokia G21): இந்த போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் + 2 எம்பி டெப்த் லென்ஸ் கொண்டுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதுவொரு ஏஐ (AI) கேமரா போனாகும். கூகுள், ஒன்பிளஸ் போன்களுக்கு நிகரான போட்டோக்களை எடுத்துக்கொள்ள முடியும்.

இதன் மற்ற அம்சங்களை பொறுத்தவரையில், 6.5 இன்ச் டிஸ்பிளே 90Hz ரெப்ஃரஷ் ரேட்டுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 11 (Android 11) உடன் யுனிஎஸ்ஓசி டி606 (Unisoc T606) சிப்செட் வருகிறது. 18W சார்ஜிங் உடன் 5050 mAh பேட்டரி வருகிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.13,190 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி நார்சோ 55 (Realme Narzo N55): இந்த போன் 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் லென்ஸ் கொண்டுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த விலையில் துல்லியமான போட்டோக்களை எடுக்கக்கூடிய போன்களில் ரியல்மி நார்சோ 55 முக்கியமானது.
இந்த போன் ஆண்ட்ராய்டு 13 உடன் மீடியாடெக் ஹீலியோ ஜி88 (MediaTek Helio G88 SoC) சிப்செட் கொண்டுள்ளது. 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டுள்ளது வருகிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது, இந்த போனின் விலை ரூ.12,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்32 பிரைம் எடிஷன் (Samsung Galaxy M32 Prime Edition): இந்த சாம்சங் போன் 64 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்சு + 2 டெப்த் லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என்று குவாட் (Quad) கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. 20 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த பட்ஜெட்டில் குவாட் கேமரா செட்டப் கொண்டுள்ள ஒரே போன் சாம்சங் கேலக்ஸி எம்32 பிரைம் எடிஷன் மட்டுமே.
இந்த சாம்சங் போன் 6.4 இன்ச் அமோலெட் டிஸ்பிளே 90Hz ரேட்டுடன் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் கொண்டுள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. இந்த போனின் விலையை பொறுத்த வரையில், ரூ. 13,499ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி 11 பிரைம் 5ஜி (Redmi 11 Prime 5G): இந்த போன் 6.58 இன்ச் ஃபுல் எச்டிபிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 90Hz ரெப்ஃரஷ் ரேட்டுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 12 உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 700 ப்ராசஸர் வருகிறது. 4 ஜிபி ரேம் 64 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000 mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் விலையை பொறுத்த வரையில் ரூ.13,249 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போக்கோ எம்4 ப்ரோ 5ஜி (Poco M4 Pro 5G): இந்த போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டிபிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 810 ப்ராசஸர் வருகிறது. 4 ஜிபி ரேம் - 64 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா, 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த போக்கோ போனின் விலையை பொறுத்தவரை ரூ.14,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications