இதான் பட்ஜெட்.. ரூ.20000 செக்மெண்ட்.. OIS கேமரா.. SONY சென்சார்.. டாப் 3 மாடல்கள்.. வேற சாய்ஸ் வேணாம்!
ரூ.20,000 பட்ஜெட்டில் மிரளவிடும் கேமரா பீச்சர்களை கொண்ட ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருப்போர்களுக்கு டாப் 3 லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சோனி சென்சார், ஓஐஎஸ் டெக்னாலஜி போன்ற பீச்சர்களும் இந்த செக்மெண்ட்டில் வருகிறது. எந்தெந்த போன் இருக்கிறது? விலை எப்படி? முழு விவரம் இதோ.
ரியல்மி 12 பிளஸ் அம்சங்கள், விலை (Realme 12 Plus Specifications Price): சோனி எல்ஒய்டி-600 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. OIS சப்போர்ட் மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.

இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் கிடைக்காத சோனி எல்ஒய்டி-600 சென்சார் வருவதால், கேமரா பிரியர்களுக்கு பக்காவான ஆப்ஷனாக இது இருக்கும். மற்ற அம்சங்களை பார்க்கையில், 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டிருக்கிறது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999ஆகவும் இருக்கிறது.
ஐக்யூ இசட்9 அம்சங்கள், விலை (iQOO Z9 Specifications Price): இந்த ஐக்யூ போனில் சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. OIS + EIS சப்போர்ட் உள்ளது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் 1080p வீடியோ ரெக்கார்டிங் உடன் வருகிறது.

இந்த சென்சாரும் பக்காவான கேமரா அவுட்புட் கொடுக்கும். இதன் போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வருகிறது. 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே உள்ளது. டிடி-ஸ்டார்2 கிளாஸ் பாதுகாப்பு கொண்டிருக்கிறது.
44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999ஆகவும் உள்ளது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.2000 உடனடி தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரெட்மி நோட் 13 5ஜி அம்சங்கள், விலை (Redmi Note 13 5G Specifications Price): இந்த போனில் 3X இன்-சென்சார் ஜூமிங் சப்போர்ட் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதுவொரு ப்ரோ-கிரேடு கேமரா மாடலாகும். அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

ஆகவே, பட்ஜெட் கேமரா பிரியர்களின் டாப் லிஸ்ட்டில் இந்த போன் இருக்கிறது. 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வருகிறது. ஆண்ட்ராய்டு 13 உள்ளது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் சிப்செட் வருகிறது. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.17,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999ஆகவும் இருக்கிறது. ரூ.1000 தள்ளுபடியோடு விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications








