Home
Mobile

மழைக்காலத்துக்கு ஏற்ற பட்ஜெட் விலை 5G போன்கள்.. 7000mAh பேட்டரி.. IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட்.. பட்டியல் இதோ..

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இப்போது நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், அதுவும் நீர் எதிர்ப்பு அல்லது மழையைத் தாங்கக்கூடிய வகையில் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இந்திய சந்தையில் பல வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்ட பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் இந்தியாவில் ரூ.20,000க்கு கீழ் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்ட சிறந்த 5G ஸ்மார்ட்போன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

1.ஓப்போ கே13 5ஜி (OPPO K13 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஒப்போ போன். மேலும்ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் உள்ளது.

மழைக்காலத்துக்கு ஏற்ற பட்ஜெட் விலை 5G போன்கள்.. பட்டியல் இதோ..

அதேபோல் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), 7000mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட் பல சிறப்பான அம்சங்கள் ஒப்போ கே13 5ஜி போனில் உள்ளது.

2.ஐக்யூ இசட்10ஆர் (iQOO Z10R) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,499 விலையில் வாங்க முடியும். அதுவும் இந்த ஐக்யூ போன் IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் வெளிவந்துள்ளது. ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் உள்ளது.

6.77-இன்ச் ஃபுல் எச்டி குவாட் கர்வ்ட் அமோலெட் (quad-curved AMOLED) டிஸ்பிளே, 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் + 2எம்பி செகண்டரி சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, 5700mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட அம்சங்களுடன் ஐக்யூ இசட்10ஆர் போன் வெளிவந்துள்ளது.

மழைக்காலத்துக்கு ஏற்ற பட்ஜெட் விலை 5G போன்கள்.. பட்டியல் இதோ..

3. மோட்டோ ஜி86 பவர் 5ஜி (Moto g86 Power 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனும் IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் அறிமுகம் செய்யப்பட்டது. 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10 பிட் கர்வ்ட் பிஓஎல்இடி (Curve pOLED) டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (In-display Fingerprint Sensor) உடன் இந்த மோட்டோ போன் வெளிவந்தது.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4NM (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட், மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு, ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளம், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ், 6720mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களுடன் மோட்டோ ஜி86 பவர் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது.

4. ரியல்மி பி3 5ஜி (Realme P3 5G) ஸ்மார்ட்போன் ரூ.15,999 விலையில் வாங்க கிடைக்கிறது. 2.5 மீட்டர்கள் ஆழம் மற்றும் 30 நிமிடங்களுக்கு தாக்குப்பிடிக்க கூடிய IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் இந்த போன் வெளிவந்தது. ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது.

மழைக்காலத்துக்கு ஏற்ற பட்ஜெட் விலை 5G போன்கள்.. பட்டியல் இதோ..

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உடன் இந்த ரியல்மி பி3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

5. ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) ஸ்மார்ட்போன் ரூ.16,300 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த போன் IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 5110mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 20எம்பி செல்பி கேமரா, 6.67 இன்ச்சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே, ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட் உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது

More from GizBot

Best Mobiles in India

English summary
best budget priced 5G phones for rainy season: waterproof protection: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X