Home
Mobile

உங்க பட்ஜெட் ரூ.15,000 தானா.. வெறும் ரூ.13,999 முதல் 3D கர்வ்ட் டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. எந்தெந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே போன்களை பட்ஜெட் விலையில் வாங்க விரும்பும் கஸ்டமர்களுக்கு பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள் (Smartphones) இருக்கின்றன. அதிலும் ரூ.15,000 பட்ஜெட்டில் வாங்க வேண்டுமானால், இந்த 3 மாடல்களை ஆப்ஷனில் எடுக்கலாம். இந்த லிஸ்டில் 3டி கர்வ்ட அமோலெட் பேனல் கிடைக்கிறது. 5500mAh பேட்டரி தொடங்கி சோனி சென்சார் கேமரா வரையில் மற்ற பீச்சர்களும் இந்த ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கின்றன. இந்த மாடல்களின் விவரங்களை பார்க்கலாம்.

லாவா போல்டு 5ஜி அம்சங்கள் (Lava Bold 5G Specifications): ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உள்ளது.

உங்க பட்ஜெட் ரூ.15,000 தானா.. ரூ.13,999 முதல் கர்வ்ட் டிஸ்பிளே மாடல்!

1 ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் வருகிறது. 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி செகண்டரி கேமரா உள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. மேலும், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கிடைக்கிறது.

இந்த லாவா போல்டு 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.13,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு கிடைக்கிறது. சப்பயர் ப்ளூ என்னும் ஒரேவொரு கலரில் மட்டுமே ஆர்டருக்கு கிடைக்கிறது.

உங்க பட்ஜெட் ரூ.15,000 தானா.. ரூ.13,999 முதல் கர்வ்ட் டிஸ்பிளே மாடல்!

இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி அம்சங்கள் (Infinix Note 50s 5G Specifications): ஃபுல்எச்டிபிளஸ் ( FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2436 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் 2 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Ultimate 4nm) சிப்செட் வருகிறது. 64 எம்பி மெயின் கேமரா (சோனி சென்சார்) + 2 எம்பி செகண்டரி கேமரா மற்றும் 13 எம்பி வருகிறது.

45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி வருகிறது. இந்த இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.15,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,000 டிஸ்கவுண்ட் போக ரூ.14,999 விலைக்கு கிடைக்கிறது. மரைன் டிரைப்ட் ப்ளூ, டைட்டானியம் கிரே, ரூபி ரெட் கலர்கள் உள்ளன.

உங்க பட்ஜெட் ரூ.15,000 தானா.. ரூ.13,999 முதல் கர்வ்ட் டிஸ்பிளே மாடல்!

மோட்டோ ஜி85 5ஜி அம்சங்கள் (Moto g85 5G Specifications): ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. 360Hz டச் சாம்பிளிங் ரேட், 1600 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கிடைக்கிறது.

50 எம்பி கேமரா (சோனி எல்ஒய்டி 600 + ஓஐஎஸ்) மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் 6என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் 3 (6nm Qualcomm Snapdragon 6s Gen 3) சிப்செட் கிடைக்கிறது. 30W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த மோட்டோ ஜி85 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலையும் ரூ.15,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,000 டிஸ்கவுண்ட் போக ரூ.14,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. ஆலிவ் கிரீன், கோபால்ட் ப்ளூ, அர்பன் கிரீன் கலர்கள் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X