ரூ. 15,000 பட்ஜெட்டில் பக்கா அம்சங்களுடன் எந்த 5G Phone வாங்கலாம்.. டாப் 5 லிஸ்ட் இதோ!
இந்தியாவின் மிகப்பெரும் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ ( Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) இரண்டும் போட்டிப் போட்டுக்கொண்டு 5ஜி சேவைகளை வழங்கிவருகின்றன. இப்போது பெரும்பாலான நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி சேவை வழங்கப்படும் என்பது உறுதியாகிவிட்டது.
இதனால் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் 5ஜி போன்களை (5g Phone) அடுத்தடுத்து இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் 5ஜி போனின் ஆரம்ப விலையே ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். இப்போது கதையே வேறு, ரூ.13 ஆயிரம் முதலே 5ஜி போன்கள் கிடைக்கின்றன.

இப்படி மலிவான விலையில் கிடைப்பதால் அதன் அம்சங்களில் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டியிருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். இருப்பினும், சில ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் சிறப்பான அம்சங்களை வழங்கிவருகிறது. அப்படி ரூ. 15,000 ஆயிரம் பட்ஜெட்டில் கேமரா, பேட்டரி, ரேம், ஸ்டோரேஜ் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை கவர் செய்யும் டாப் 5 5ஜி போன்களை தெரிந்து கொள்ளுங்கள்.
சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி அம்சங்கள்: 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி+ எல்சிடி டிஸ்பிளே கொண்டது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Gorilla Glass 5) பாதுகாப்பு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 உடன் Exynos 1330 (5என்எம்) (Exynos 1330 (5nm)) ப்ராசஸர் உள்ளது. 4 ஜிபி ரேம் - 64 ஜிபி ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம் - 128 ஜிபி ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் - ஜிபி 128 ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்டுகளில் வருகிறது.
6,000mAh பேட்டரி 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் வருகிறது. 50 எம்பி மெயின் கேமராவானது, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ உடன் ட்ரிபிள் கேமரா செட்டப்பில் இருக்கிறது. 13 எம்பி செல்பீ கேமரா உள்ளது. நேவி ப்ளூ (Navy Blue), லைட் ப்ளூ ( Light Blue), சில்வர் (Silver) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இந்த 5ஜி போனின் ஆரம்ப விலை ரூ.14,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போக்கோ எம்4 ப்ரோ 5ஜி அம்சங்கள்: 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி+ டிஸ்பிளே கொண்டது. ஆண்ட்ராய்டு 12 உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 810 ப்ராசஸர் வருகிறது. 4 ஜிபி ரேம் - 64 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 5,000mAh பேட்டரி 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் வருகிறது. விலையை பொறுத்தவரை ரூ.14,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி அம்சங்கள்: 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி+ எல்சிடி டிஸ்பிளே கொண்டது. ஆண்ட்ராய்டு 12 உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 700 ப்ராசஸர் வருகிறது. 4 ஜிபி ரேம் - 64 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 5,000mAh பேட்டரி 15W சார்ஜிங் வசதி உடன் வருகிறது. விலையை பொறுத்தவரை ரூ.12,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி 11 பிரைம் 5ஜி அம்சங்கள்: 6.58 இன்ச் ஃபுல் ஹெச்டி+ டிஸ்பிளே 90Hz ரெப்ஃரஷ் ரேட்டுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 12 உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 700 ப்ராசஸர் வருகிறது. 4 ஜிபி ரேம் 64 ஸ்டோரேஜ் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 5000 mAh பேட்டரி 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. இந்த போனின் விலை ரூ.13,249 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மியேடோவ் கிரீன் (Meadow Green), குரோம் சில்வர் ( Chrome Silver) , தண்டர் பிளாக் ( Thunder Black) கலர்களின் கிடைக்கிறது.
ரியல்மி நார்சோ 50 அம்சங்கள்: 6.6 இன்ச் எல்சிடி டிஸ்பிளே 120Hz ரெப்ஃரஷ் ரேட்டுடன் வருகிறது. 4 ஜிபி ரேம் 128 ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. ஆண்டிராய்டு 11 உடன் மீடியாடெக் ஹீலியோ ஜி96 ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 5000 mAh பேட்டரி 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. இந்த போனின் விலை ரூ.ரூ.14,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கலர்களின் கிடைக்கிறது. ஸ்பீடு ப்ளு (Speed Blue), ஸ்பீடு பிளாக் ( Speed Black) கலர்களின் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications