Home
Mobile

2025-லயும் கலக்கும் போலயே.. 2024-ன் பெஸ்ட் 5G போன் இப்போது வெறும் ரூ.8,299 க்கு.. எந்த மாடல்?

2024 ஆம் ஆண்டின் பெஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் (Best Budget Smartphone 2024) என்று பெயர் வாங்கிய ரெட்மி நிறுவனத்தின் 5ஜி மாடல் ஒன்று தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ரூ.8,299 க்கு வாங்க கிடைக்கிறது. அதென்ன மாடல்? எவ்வளவு ஆபர் கிடைக்கிறது? என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா (Amazon India) வழியாக, அதன் எம்ஆர்பி விலையில் இருந்து 25% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.10,999 க்கு பதிலாக ரூ.8,299 க்கு வாங்க கிடைக்கிறது. ஆக இந்த ஸ்மார்ட்போன் கடந்த 2024 ஆம் ஆண்டை போலவே இந்த 2025 ஆம் ஆண்டிலும் விற்பனையில் சக்கைபோடு போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024-ன் பெஸ்ட் 5G போன் இப்போது வெறும் ரூ.8,299 க்கு!

ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்ள்: டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு உடன் வரும் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) உடன் வருகிறது. ரெட்மி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 வருட ஓஎஸ் அப்டேட்கள் (2 Major OS Updates) மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 720 x 1640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.88-இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை (LCD Display) கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை இது 4ஜிபி எல்பிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்ட 4என்எம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட் (4nm Snapdragon 4s Gen 2 chipset) மூலம் இயக்கப்படுகிறது.

ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் கேமராக்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) உடன் வருகிறது. இதில் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உடன் குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை கேமரா ஒன்றும் உள்ளது. முன்பக்க கேமராவை பொறுத்தவரை செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக, எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் பேட்டரியை பொறுத்தவரை இது 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5160mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் பாக்ஸில் (Smartphone Retail Box) ரூ.1,999 மதிப்புள்ள 33W சார்ஜர் முற்றிலும் இலவசமாக அனுப்பப்படும் என்று அமேசான் இந்தியா வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 128ஜிபி வரையிலான யுஎப்எஸ் 2.2 ஸ்டோரேஜை கொண்டுள்ளது. சுவாரசியமாக இதன் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை (Micro SD Card Slot) பயன்படுத்தி 1டிபி வரை நீட்டிக்கவும் முடியும். கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 5, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.

மேலும் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் (Finger Print Scanner) கொண்டுள்ளது. கூடவே தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங்கையும் (IP52 rating) கொண்டுள்ளது. கடைசியாக இது அளவீடுகளில் 171.88x77.80x8.22மிமீ உள்ளது மற்றும் எடையில் 212.35 கிராம் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Budget 5G Phone in 2024 Redmi A4 5G Now Selling At Offer Price Rs 8299
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X