கனவுல கூட நினைக்கல இந்த Samsung போனின் விலையை இவ்வளவு குறைப்பாங்கனு!

|

பேட்டரி லைஃப் என்று வரும் போது.. 10 க்கு 10 என்கிற மதிப்பெண்களை பெறும் ஒரு ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால்.. உங்களுக்கு "ஒரு" குட் நியூஸ்!

அதிலும் நீங்கள் ஒரு Samsung பிரியர் என்றால்.. இன்னும் குறிப்பாக ஒரு பட்ஜெட் போனை வாங்க திட்டமிட்டு வருகிறார்கள் என்றால் உங்களுக்கு இந்த கட்டுரையில் இருக்கும் "ஒவ்வொரு" வரிகளுமே குட் நியூஸ் தான்!

அதென்ன குட் நியூஸ்?

அதென்ன குட் நியூஸ்?

சாம்சங் நிறுவனத்திடம் இருந்து பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் ஒரு தரமான 'பேட்டரி-பேஸ்டு' (அதாவது தரமான பேட்டரி லைஃப்பை வழங்கும்) ஒரு ஸ்மார்ட்போன் மீது "நம்ப முடியாத அளவிலான" விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஏன் நம்பமுடியவில்லை என்றால்.. இது ஏற்கனவே ஒரு பட்ஜெட் போன் ஆகும்! இப்போது சூப்பர்-பட்ஜெட் போனாகி விட்டது!

அதென்ன மாடல்? அதன் பழைய மற்றும் புதிய விலை நிர்ணயம் என்ன? இந்த ஸ்மார்ட்போனில் பேட்டரி மட்டும் தான் வொர்த்-ஆ? இது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? விலைக்குறைப்பிற்கு பின்னரும் இதை நம்பி வாங்கலாமா? வேண்டாமா? வாருங்கள் விரிவாக பார்ப்போம்!

சுற்றி வளைக்காத 'ஓப்பன்' Review! Redmi K50i 5G போனை வாங்கலாமா?சுற்றி வளைக்காத 'ஓப்பன்' Review! Redmi K50i 5G போனை வாங்கலாமா?

விலைக்குறைப்பை பெற்றுள்ள அந்த Samsung Phone?

விலைக்குறைப்பை பெற்றுள்ள அந்த Samsung Phone?

ஏற்கனவே பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி F22 ஸ்மார்ட்போன் மீது தான் தற்போது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம், இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் இது இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகமானது.

சுவாரசியமான விடயம் என்னவென்றால், வாங்க கிடைக்கும் இரண்டும் ஸ்டோரேஜ் வேரியண்ட்களுமே இந்த "விலை வீழ்ச்சியை" சந்தித்து உள்ளன.

பழைய விலை VS புதிய விலை?

பழைய விலை VS புதிய விலை?

Samsung Galaxy F22 ஸ்மார்ட்போன் ஆனது 4GB + 64GB மற்றும் 6GB + 128GB என்கிற ஸ்டோரேஜ் ஆப்ஷகளின் கீழ் முறையே ரூ.12,499 மற்றும் ரூ.14,499 க்கு அறிமுகமானது.

தற்போது இந்த இரண்டின் மீதும் ரூ.2,000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் இப்போது 4ஜிபி ரேம் மாடலை ரூ.10,499 க்கும், 6ஜிபி ரேம் மாடலை ரூ.12,499 க்கும் வாங்கலாம்.

Infinix Hot 12 Pro: எதுவும் சொல்ல வேண்டாம்; இந்தா ரூ.9,999! முதல்ல இந்த Phone-ஐ கொடு!Infinix Hot 12 Pro: எதுவும் சொல்ல வேண்டாம்; இந்தா ரூ.9,999! முதல்ல இந்த Phone-ஐ கொடு!

விலைக்குறைப்பு மட்டும் தானா?

விலைக்குறைப்பு மட்டும் தானா?

அதுதான் இல்லை! டெனிம் ப்ளூ மற்றும் டெனிம் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷனில் வாங்க கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி F22 ஸ்மார்ட்போன் மீது வங்கி சலுகை ஒன்றும் அணுக கிடைக்கிறது.

நீங்கள் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தும் பட்சத்தில், இந்த ஸ்மார்ட்போனின் மீது கூடுதலாக ரூ.1,000 என்கிற தள்ளுபடியை பெறலாம்.

ரூ.10,500 க்கு Samsung Galaxy F22 போன் வொர்த்-ஆ?

ரூ.10,500 க்கு Samsung Galaxy F22 போன் வொர்த்-ஆ?

"எனக்கு பேட்டரி தான்பா முக்கியம்!" என்பவர்கள் இதற்கு மேல் படிக்கவே வேண்டாம். Galaxy F22 மாடலை கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம். ஆனால் "நல்ல பேட்டரி லைஃப்" என்கிற ஒரே ஒரு காரணத்தை வைத்து இதை வாங்க முடியாது என்பவர்கள் தொடர்ந்து படிக்கவும்.

ஏனெனில், இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது என்பதை அறிந்தால் மட்டுமே இதை வாங்கலாமா வேண்டாமா என்கிற முடிவுக்கு நம்மால் வர முடியும்.

iQOO 9T: இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!iQOO 9T: இந்த Phone-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்க.. 1 இல்ல 9 காரணம் சொல்லலாம்!

டிஸ்பிளே, பெர்ஃபார்மென்ஸ், ஓஎஸ்: 10 க்கு 7 மார்க் கொடுக்கலாம்!

டிஸ்பிளே, பெர்ஃபார்மென்ஸ், ஓஎஸ்: 10 க்கு 7 மார்க் கொடுக்கலாம்!

Samsung Galaxy F22 ஆனது 6.4-இன்ச் HD+ Super AMOLED Infinity-U டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவையும் கொண்டுள்ளது.

இது மீடியாடெக் ஹீலியோ ஜி80 ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த UI 3.1 மூலம் இயங்குகிறது.

பேட்டரி: 10 க்கு 10 மார்க்!

பேட்டரி: 10 க்கு 10 மார்க்!

Samsung Galaxy F22 ஆனது 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 15W USB-C ஃபாஸ்ட் சார்ஜருடன் வருகிறது. இருந்தாலும் 25W வரையிலான சார்ஜிங்கையும் ஆதரிக்கும்.

நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 130 மணிநேர மியூசிக் பிளேபேக், 40 மணிநேர டாக் டைம், 25 மணிநேர வீடியோ பிளேபேக் மற்றும் 24 மணிநேர இன்டர்நெட் ப்ரவுஸிங் டைம்-ஐ வழங்கும்.

அறிமுகமான வேகத்துல இப்படி ஒரு ஆபரா! அதுவும் இந்த Samsung 5G போன் மீது!அறிமுகமான வேகத்துல இப்படி ஒரு ஆபரா! அதுவும் இந்த Samsung 5G போன் மீது!

கேமராக்கள்: 10 க்கு 8 மார்க் கொடுக்கலாம்!

கேமராக்கள்: 10 க்கு 8 மார்க் கொடுக்கலாம்!

கேமராக்களை பொறுத்தவரை, இது குவாட் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ISOCELL Plus தொழில்நுட்பம் மற்றும் GM2 சென்சார்-ஐ கொண்ட 48MP மெயின் கேமரா + 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் (123-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ) + 2MP மேக்ரோ லென்ஸ் + 2MP டெப்த் கேமரா உள்ளது. முன்பக்கத்தில், 13MP செல்பீ கேமரா உள்ளது.

சரி வாங்க.. இது வொர்த்-ஆ.. இல்லையானு பார்ப்போம்!

சரி வாங்க.. இது வொர்த்-ஆ.. இல்லையானு பார்ப்போம்!

அடிப்படைத் தேவைகள் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இதன் பேட்டரி லைஃப் சிறப்பாக உள்ளது தான், ஆனாலும் இதன் "பெரிய" 6000mAh பேட்டரியை 15W சார்ஜரை கொண்டு சார்ஜ் செய்ய, இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஆகிறது. அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நல்ல பேட்டரி இருக்கிறது, ஆக சூப்பராக கேமிங் செய்யலாம் என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். ஏனெனில் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் செயல்திறன் சுமார் தான்!

அதே போல, இதன் குவாட் ரியர் கேமராக்களை கொண்டு "வேற லெவல்" போட்டோக்களை எடுக்கலாம் என்று நினைத்தாலும், அவ்வப்போது ஏமாற்றம் அடையலாம். குறிப்பாக லோ லைட் புகைப்படங்களில்!

இனிமேல் முடிவு செய்ய வேண்டியது நீங்கள் தான்!

Photo Courtesy: Samsung

Best Mobiles in India

English summary
Best Battery Backup Budget Smartphone 2022 Samsung Galaxy F22 Get Rs 2000 Price Cut

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X