2022 ஜூலை பெஸ்ட் இதுதான்- ரூ.10000-க்கு கீழ் கிடைக்கும் அட்டகாசமான Android ஸ்மார்ட்போன்கள்.!
இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பதால் பல செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி போன்களையே அதிகம் அறிமுகம் செய்கின்றன. ஆனால் இந்தியாவில் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இப்போது கூட நல்ல வரவேற்பு உள்ளது.

ரெட்மி 10
குறிப்பாக 5ஜி அறிமுகமானாலும் 4ஜி ஸ்மார்ட்போன்கள்தான் அதிகளவில் விற்பனை செய்யபடும் என்று கூறப்படுகிறது
மேலும் இப்போது ரூ.10,000-க்கு கீழ் அசத்தலான அம்சங்களுடன் கிடைக்கும் 4ஜிAndroid ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி 10
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,999-விலையில் வாங்க முடியும். இந்த போன் 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்த அருமையாக இருக்கும்.
அதேபோல் இந்த போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 5எம்பி செல்பீ கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது ரெட்மி 10.எனவே இந்த போனை நம்பிவாங்கலாம்.

விவோ Y01
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட விவோ Y01 போனின் விலை ரூ.8,499-ஆக உள்ளது. இதை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றே கூறலாம்.
அதேபோல் 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ Y01 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ரியல்மி நார்சோ 50ஐ
4ஜிபி ரேம் மற்றும் இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரியல்மி நார்சோ 50ஐ போனை அமேசான் தளத்தில் ரூ.8,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக ஆக்டோ-கோர் பிராசஸர் வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இதை பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும்.
நார்சோ 50ஐ போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்.

ஒப்போ ஏ15எஸ்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.9,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்தபோன் 13எம்பி மெயின் கேமரா +2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ போன்.
அதேபோல் 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, மீடியடெக் ஹீலியோ பி35 சிப்செட், 4230 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ03
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட கேலக்ஸி ஏ03 போனை ரூ.9,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் 6.5-இன்ச் இன்பினிட்டி-வி டிஸ்பிளே, 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர், 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.
கேலக்ஸி ஏ03 போன் ஆனது 48எம்பி டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. பின்பு 5எம்பி செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான கேலக்ஸி ஏ03 போன்.

மோட்டோரோலா இ32எஸ்
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட மோட்டோரோலா இ32எஸ் போனை அமேசான் தளத்தில் ரூ.9,999-விலையில் வாங்க முடியும். இந்த போன் 16எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
மேலும் 8எம்பி செல்பீ கேமரா, 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா இ32எஸ் ஸ்மார்ட்போன்.

போக்கோ சி31
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட போக்கோ சி31 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.7,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
பின்பு 5எம்பி செல்பீ கேமரா, 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த போக்கோ சி31

ஒப்போ ஏ16இ
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ16இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,490-ஆக உள்ளது. குறிப்பாக இதை அமேசான் தளத்தில் வாங்க முடியும். மேலும் 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இதுதவிர டூயல் ரியர் கேமர ஆதரவு, 4230 எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட், ஆண்ராய்டு 11 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஏ16இ ஸ்மார்ட்போன்.

ரெட்மி 9 ஆக்டிவ்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.8,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது.

மேலும் 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், டூயல் சிம் உள்ளிட்ட அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது ரெட்மி 9 ஆக்டிவ் போன்.

ரியல்மி சி31
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரியல்மி சி31 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,299-ஆக உள்ளது. குறிப்பாக
இந்த ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் வாங்க முடியும். மேலும் 6.52-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்தரியல்மி சி31 ஸ்மார்ட்போன்.

குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி, Unisoc T612 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போன் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் + 0.3எம்பி கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி31 ஸ்மார்ட்போன்.

ரெட்மி 9ஏ
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,799-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி போனை அமேசான் தளத்தில் வாங்க முடியும்.
மேலும் 6.53-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே, ஹீலியோ ஜி25 சிப்செட், 13எம்பி ரியர் கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications