2024 இன் சிறந்த பீச்சர் போன்கள்.. Nokia முதல் ஜியோ வரை.. குறைந்த விலை.. இதோ பட்டியல்..
அதிநவீன ஸ்மார்ட்போன்கள் வந்தாலும் இன்னும் பீச்சர் போன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதாவது ஸ்மாரட்போனில் வீடியோகேம், இணையம் போன்ற பல அம்சங்களைப் பயன்படுத்துவதால் விரைவில் பேட்டரி காலி ஆகி விடும். இது போன்ற சமயங்களில் பீச்சர் போன் ஒன்று இருந்தால் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். கால் அழைப்புகளுக்கு எந்த பிரச்சனையும் வராது.
எனவே தான் இப்போதும் குறைந்த விலையில் கிடைக்கும் பீச்சர் போன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். 2024 இன் சிறந்த ஃபீச்சர் போன்களை (Best Feature Phones of 2024) இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

1.நோக்கியா 235 4ஜி 2024 (Nokia 235 4G 2024) போன் ஆனது ரூ.4,099 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த போன் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதாவது 2 எம்பி பின்புற கேமரா, ஒரு எஃப்எம் ரேடியோ, புளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் 2.8-இன்ச் டிஸ்பிளே இதில் உள்ளது.
அதேபோல் 1450mAh பேட்டரி வசதி இந்த நோக்கியா 235 4ஜி போனில் உள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு Cloud Apps, யூட்யூப் போன்ற பல வசதிகள் இந்த போனில் உள்ளன.
2.எச்எம்டி 105 4ஜி (HMD 105 4G) போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது இந்த போன் 1450mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் 15 நாள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் 2.4-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் கிளாசிக் ஸ்னேக் கேம், எஃப்எம் ரேடியோ மற்றும் எம்பி3 பிளேயர் போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக 4ஜி ஆதரவுடன் எச்எம்டி 105 போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் எச்டி வாய்ஸ் கால்களை உறுதி செய்கிறது. இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த எச்எம்டி போனில் உள்ளன. தற்போது இந்த போன் ரூ.2,437 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
3.ஜியோ பாரத் ஜே1 4ஜி (JioBharat J1 4G) போனில் போனில் 2.8-இன்ச் டச் இல்லாத திரை உள்ளது. மேலும் 2,500 mAh பேட்டரியைக் கொண் வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் ஜியோபாரத் ஜே1 4ஜி போனுக்கு 4ஜி பேண்ட் கனெக்டிவிட்டி வருகிறது. ஆகவே எச்டி காலிங் மற்றும் ஹை-ஸ்பீடு இன்டர்நெட் கிடைக்கும். இந்த போனில் யூடியூப் போன்ற இதர ஆப்களின் சப்போர்ட் வருகிறது.
குறிப்பாக ஜியோ பாரத் ஜே1 4ஜி போனில் 128 ஜிபி மெமரி கார்டு சப்போர்ட் உள்ளது. சிங்கிள் நானோ சிம் சிலாட் (Single Nano SIM Slot) வருகிறது. மேலும் இதில் உள்ள ஜியோசாட் ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜ், குரூப் சாட் மற்றும் போட்டோ, வீடியோ ஷேரிங் செய்து கொள்ளலாம். குறிப்பாக ஜியோ பாரத் ஜே1 4ஜி ஆனது ரூ.1935 விலையில் வாங்கிவிட முடியும்.

4.நோக்கியா 2760 ஃபிளிப் 4ஜி (Nokia 2760 Flip 4G) போனுக்கு இப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்த போன் ரூ.5299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் KaiOS மூலம் இந்த போன் இயங்குகிறது. மேலும் 1450எம்ஏஎச் பேட்டரி, 0.3எம்பி கேமரா, 2.8-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
5.ஜியோபோன் பிரைமா 2 4ஜி (JioPhone Prima 2 4G) ஆனது தற்போது ரூ.3090 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த போன் குவால்காம் எஸ்ஓசி (Qualcomm SoC) சிப்செட் மற்றும் கய் ஓஎஸ் 2.53 (KAI OS 2.5.3) மூலம் இயங்குகிறது. பின்பு 2.4 இன்ச் டிஸ்பிளே, 0.3 எம்பி விஜிஏ (VGA) கேமரா, 2000mAh பேட்டரி, 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), யுஎஸ்பி 2.0 (USB 2.0) போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








