Home
Mobile

6ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை ரூ.15,000-க்கு கீழ் வாங்க ஆசையா? அப்போ இந்த பட்டியலை பாருங்க.!

சியோமி, ஒப்போ, மோட்டோ நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு 6ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்கின்றன. அதேபோல் இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளன.

 ரூ.15.000-க்கு கீழ் கிடைக்கும் போன்கள்

ரூ.15.000-க்கு கீழ் கிடைக்கும் போன்கள்

சமீபத்தில் மோட்டோ நிறுவனம் அதிகமான 6ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 6ஜிபி ரேம் இருந்தால் போன்களை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும் இப்போது இந்திய சந்தையில் ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் 6ஜிபி ரேம் கொண்ட அட்டகாசமான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை
சற்று விரிவாகப் பார்ப்போம்.

 போக்கோ எம்4 ப்ரோ

போக்கோ எம்4 ப்ரோ

6ஜிபி ரேம் கொண்ட போக்கோ எம்4 ப்ரோ மாடலை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே மற்றும் 1080 × 2400 பிக்சல்ஸ் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான போன்.

அதேபோல் போக்கோ எம்4 ப்ரோ போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 810 பிராசஸர் உடன் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு ஆதரவும் கொண்டுள்ளது.மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த போக்கோ எம்4 ப்ரோ.

போக்கோ எம்4 ப்ரோ கேமரா

போக்கோ எம்4 ப்ரோ கேமரா

போக்கோ எம்4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.

 ஒப்போ எஃப்19

ஒப்போ எஃப்19

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ஒப்போ எஃப்19 மாடலின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் உடன் அட்ரினோ 610 ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ எஃப்19 போன். இதுதவிர 2400 × 1080 பிக்சல், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், டூயல் 4ஜி வோல்ட்இ ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஒப்போ எஃப்19 கேமரா

ஒப்போ எஃப்19 கேமரா

ஒப்போ எஃப்19 போன் ஆனது 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஒப்போ போன்.

 ஒப்போ எஃப்74 5ஜி

ஒப்போ எஃப்74 5ஜி

6ஜிபி ரேம் கொண்ட ஒப்போ எஃப்74 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.14,990-விலையில் வாங்க முடியும். இந்த போன் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும் 8எம்பி செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5ஜி ஆதரவு, டூயல் 4ஜி வோல்ட்இ ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒப்போ எஃப்74 5ஜி மாடல்.

 ஒப்போ எஃப்74 5ஜி சிப்செட்

ஒப்போ எஃப்74 5ஜி சிப்செட்

ஒப்போ எஃப்74 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 619 ஜிபியு வசதியும் உள்ளது. பின்பு 6.5-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி40 ஃபியூஷன்

மோட்டோ ஜி40 ஃபியூஷன்

6ஜிபி ரேம் கொண்ட மோட்டோ ஜி40 ஃபியூஷன் ஸ்மார்ட்போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே,
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட்,வைஃபை 5 ஆதரவு, டூயல் 4ஜி வோல்ட், 6000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த போன் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி40 ஃபியூஷன்.

சியோமி ரெட்மி நோட் 10எஸ்

சியோமி ரெட்மி நோட் 10எஸ்

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. பின்பு ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட், 6.43-இனச் ஃபுல் எச்டி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, டூயல் 4ஜி வோல்ட்இ போன்ற
பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் 13எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவந்துள்ளது சியோமி ரெட்மி நோட் 10எஸ்.

 ஒப்போ கே10

ஒப்போ கே10

6ஜிபி ரேம் கொண்ட ஒப்போ கே10 ஸ்மார்ட்போனை ரூ.14,990-விலையில் வாங்க முடியும். இந்த புதிய ஸ்மார்ட்போன் 6.59-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே, ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், டூயல் சிம் ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

குறிப்பாக இந்த போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமானஒப்போ கே10.

 இன்பினிக்ஸ்  நோட் 12 டர்போ

இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ

6ஜிபி ரேம் கொண்ட இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். இந்த போன் 50எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் 16எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, டூயல் 4ஜி வோல்ட்இ உட்பட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ.

Best Mobiles in India

English summary
Best 6GB RAM Smartphones Under Rs.15,000! Here is the list: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X