திடீர் விலைக்குறைப்பு.. அடிச்சு பிடிச்சு விற்பனையாகும் 6000mAh Samsung போன்!
பட்ஜெட் விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டு இருந்தால், குறிப்பாக நீடித்த பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் ஒரு மொபைல் போனை வாங்க வேண்டும் என்று காத்திருந்தால்.. இதுதான் சரியான நேரம்!

"பெஸ்ட் 6000mAh பேட்டரி போன்" மீது விலைக்குறைப்பு!
ஏனெனில் Samsung நிறுவனத்திடம் இருந்து வாங்க கிடைக்கும் ஒரு "பெஸ்ட் 6000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்" மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது!
அதென்ன மாடல்? அதன் பழைய மற்றும் புதிய விலை விவரங்கள் என்ன? Price Cut-க்கு பின்னரும் கூட இதை வாங்கலாமா? 6000mAh பேட்டரியை தவிர்த்து, இந்த ஸ்மார்ட்போன் வேறு என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது?
யாரெல்லாம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்? யாரெல்லாம் 'ஸ்கிப்' செய்வது நல்லது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

Price Cut-ஐ பெற்றுள்ள அந்த Samsung ஸ்மார்ட்போன்!
சாம்சங் நிறுவனதின் மிகவும் பிரபலமான பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான Galaxy M12 மீது தான் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்சி M12 ஆனது இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கிறது. அது 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் மாடல்கள் ஆகும்.
ஆனால் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலையை மட்டுமே குறைத்துள்ளது. அதாவது 4ஜிபி ரேம் மாறுபாட்டின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது!

Samsung Galaxy M12 புதிய விலை VS பழைய விலை?
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M12 ஸ்மார்ட்போனின் 6GB ரேம் வேரியண்ட்டை ரூ.13,499 க்கு அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,000 என்கிற விலைக்குறைப்பை பெற்று ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது.
விலைக்குறைப்பு மட்டும் அல்ல Samsung Galaxy M12 மீது நோ-காஸ்ட் EMI விருப்பமும் அணுக கிடைக்கிறது. கூடுதலாக நீங்களொரு ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளராக இருந்தால் M12-ஐ வாங்கும் போது ரூ.1000 என்கிற உடனடி தள்ளுபடியையும் பெறலாம்.
இந்த ஸ்மார்ட்போன் ப்ளூ, பிளாக் மற்றும் ஒயிட் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

ரூ.12,499 க்கு Galaxy M12 வொர்த் ஆன போன்-ஆ?
இது வொர்த்-ஆ, இல்லையா என்கிற முடிவுக்கு வர, முதலில் Samsung Galaxy M12 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
இது 720x1600 பிக்சல் ரெசல்யூஷனை கொண்ட 6.5 இன்ச் HD+ இன்ஃபினிட்டி-V டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் Octa-core Exynos 850 SoC மூலம் இயக்கப்படுகிறது.
டூயல் சிம் சப்போர்ட் உடன் இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த லேயர் ஆன ஒன் யுஐ 3.1-ஐ பேக் செய்கிறது.

ஸ்டோரேஜ், கேமரா, பேட்டரி எல்லாம் எப்படி?
முன்னரே குறிப்பிட்டபடி, Samsung Galaxy M12 ஆனது (4GB ரேம் + 64GB மற்றும் 6GB ரேம் + 128GB) இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது. ஒரு மைக்ரோ எஸ்டி கார்ட்டை சேர்ப்பதன் வழியாக நீங்கள் இதன் ஸ்டோரேஜை 1TB வரை விரிவாக்கலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, கேலக்ஸி M12 ஆனது 48MP மெயின் கேமரா (f/2.0) + 5MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் (f/2.2) கேமரா + 2MP டெப்த் சென்சார் + 2MP மேக்ரோ கேமரா என்கிற குவாட்-ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8MP செல்பீ கேமரா உள்ளது.
பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

யாரெல்லாம் வாங்கலாம்? யாரெல்லாம் வாங்க வேண்டாம்?
அற்புதமான பேட்டரி லைஃப், கவர்ச்சிகரமான டிசைன், க்ளீன் ஆன சாஃப்ட்வேர் போன்றவைகளை எதிர்பார்ப்பவர்கள் கண்களை மூடிக்கொண்டு இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
தரமான HD+ ரெசல்யூஷன் டிஸ்பிளே வேண்டும், வேற லெவலில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும் கேமரா வேண்டும் என்பவர்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்காமல் தவிர்க்கலாம்!


Click it and Unblock the Notifications