விட்றாதீங்க.. கம்மி பட்ஜெட்.. 50எம்பி கேமரா.. 7000mAh பேட்டரி கொண்ட 5ஜி போன்கள்.. பட்டியல் இதோ..
இந்தியாவில் பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 7000mAh பேட்டரி கொண்ட மொபைல் போனைகளை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது பெரிய பேட்டரி கொண்ட போன்களுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் கம்மி பட்ஜெட்டில் கிடைக்கும் 7000mAh பேட்டரி கொண்ட 5ஜி போன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
போக்கோ எம்7 பிளஸ் 5ஜி(POCO M7 Plus 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,499 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த போக்கோ போன் 7000mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குரோம் சில்வர் (Chrome Silver), அக்வா ப்ளூ (Aqua Blue) மற்றும் கார்பன் பிளாக் (Carbon Black) நிறங்களில் நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 6என்எம் 5 எஸ்ஒசி சிப்செட் (Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC), ஆண்ட்ராய்டு 15 OS, 6.9-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 8எம்பி செல்பி கேமரா, IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது.
ரெட்மி 15 5ஜி (Redmi 15 5G) ஸ்மார்ட்போன் ரூ.14,998 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ரெட்மி போன் ஆனது 7000mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்தது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 18W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட், 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8எம்பி ரியர் கேமரா, தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங், ஐ ஸ்கை (AI Sky), ஏஐ பியூட்டி (AI Beauty) மற்றும் ஏஐ ஏரேஸ் (AI Erase) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது ரெட்மி 15 5ஜி.

ஒப்போ கே13 5ஜி (OPPO K13 5G) ஸ்மார்ட்போன் மாடல் ரூ.17,494 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஒப்போ போன் 7000mAh பேட்டரி உடன் வெளிவந்தது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட் வசதி இந்த போனில் உள்ளது.
குறிப்பாக 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, IP65 ரேட்டிங் ரெசிஸ்டன்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உள்ளிட்ட வசதிகள் இந்த ஒப்போ கே13 5ஜி போனில் உள்ளன.
ரியல்மி பி4 5ஜி (Realme P4 5G) ஸ்மார்ட்போன் ரூ.19,499 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ரியல்மி போன் 7000mAh பேட்டரி உடன் வெளிவந்தது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட்டால் ரியல்மி பி4 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

அதேபோல் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 6.77-இன்ச் AMOLED டிஸ்பிளே, வீசி கூலிங் சிஸ்டம், ஏஐ எடிட் ஜீனி, ஏஐ டிராவல் ஸ்னாப் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி பி4 5ஜி போன் வெளிவந்தது.
ரியல்மி 15டி 5ஜி (realme 15T 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த போன் 7000mAh பேட்டரி, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 50எம்பி செல்பி கேமரா, 6.57-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 6400 மேக்ஸ் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது.


Click it and Unblock the Notifications