Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5ஜி போன்கள்.. 108எம்பி கேமரா.. இதோ பட்டியல்..

இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு கம்மி பட்ஜெட்டில் 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் தரமான சிப்செட் மற்றும் சிறந்த கேமரா அம்சங்கள் கொண்ட போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது ரூ.15,000-க்குள் கிடைக்கும் சிறந்த 5ஜி போன்களை ( 5g phone under RS 15000) இந்த பதிவில் பார்க்கலாம்.

விவோ டி4எக்ஸ் 5ஜி (vivo T4x 5G) ஸ்மார்ட்போனை ரூ.13,999 விலையில் வாங்கிவிடலாம். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.72 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளேஉடன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2408 × 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டியூவி ரெய்ன்லேண்ட் ஐ புரொடெக்டன் (TUV Rheinland Eye Protection) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5ஜி போன்கள்..

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.. மேலும் 8எம்பி கேமரா, IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), MIL-STD-810H - மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Military Grade Shock Resistance) போன்ற சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவந்தது.

இதுதவிர ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), 6500mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டைப்-சி ஆடியோ (Type-C Audio), லைவ் டெக்ஸ்ட் (Live Text), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search), ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் (AI Screen Translation) போன்ற அம்சங்களும் இந்த விவோ டி4எக்ஸ் போனில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி (Samsung Galaxy M16 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,998 விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. மேலும் One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது.

ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5ஜி போன்கள்..

அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன். மேலும் 13எம்பி செல்பி கேமரா, டைமன்சிட்டி 6300 (Dimensity 6300 Chipset) சிப்செட், 5000mAh பேட்டரி, 25W சார்ஜிங், 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி போன். தண்டர் பிளாக் (Thunder Black), ப்ளஷ் பிங்க் (Blush Pink), மின்ட் கிரீன் (Mint Green) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (realme P3x 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,999 விலையில் வாங்க கிடைக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி பி3எக்ஸ் 5ஜி போன் ஆனது 6.72-இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 × 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், ஆர்மோர்ஷெல் கிளாஸ் (ArmorShell Glass) பாதுகாப்பு, ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட், 50 எம்பி டூயல் ரியர் கேமரா, IP68 + IP69 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், உடன் இந்த ரியல்மி போன் வெளிவந்தது.

மோட்டோரோலா ஜி64 5ஜி(Motorola G64 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 6.5-இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி64 5ஜி போன். மேலும் 2400 × 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5ஜி போன்கள்..

50 எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 (Octa Core 6nm MediaTek Dimensity 7025) சிப்செட், 6000mAh பேட்டரி, 30W டர்போ சார்ஜிங் (Turbo Charging), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட அம்சங்களும் மோட்டோரோலா ஜி64 5ஜி போனில் உள்ளன.

போக்கோ எ6 பிளஸ் 5ஜி (POCO M6 Plus 5G) ஸ்மார்ட்போன் ரூ.10,499 விலையில் வாங்க கிடைக்கிறது. 6.79-இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டு வெளிவந்தது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2460 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் , கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஈ 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 AE 4nm) சிப்செட், 108எம்பி டூயல் ரியர் கேமரா, 13எம்பி செல்பி கேமரா, 5030mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளிட்ட பல வசதிகள் போக்கோ எ6 பிளஸ் 5ஜி போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Best 5G smartphones under Rs 15000 in India: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X