Home
Mobile

ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனங்கள் தற்போது சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை வழங்கியுள்ளது. ஆனால் விரைவில் இந்தியா முழுவதும் இந்நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கும். அதேபோல் தற்போது 5ஜி போன்களுக்கும் அதிக வரவேற்பு உள்ளது.

அதாவது பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் போட்டிபோட்டுக் கொண்டு 5ஜி போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக சில நிறுவனங்கள் 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் ரூ.15,000-க்கு கீழ் வாங்கச் சிறந்த 5ஜி போன்களை இப்போது பார்ப்போம்.

ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்!

லாவா Blaze 5G

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி லாவா Blaze 5G போனை ரூ.10,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்றே கூறலாம். இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

லாவா Blaze 5G அம்சங்கள்

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த லாவா டீடயணந 5பு போன். பின்பு 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த லாவா போன். எனவே இந்த போனின் கேமரா உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். பின்பு 8எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் Dimensity 700 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த லாவா Blaze 5G போன்.

ஐக்யூ Z6 Lite 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐக்யூ Z6 Lite ஸ்மார்ட்போன் ரூ.13,999-விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த 5ஜி போன் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

மேலும் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஐக்யூ Z6 Lite 5ஜி போன் வெளிவந்துள்ளது.

ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்!

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.13,999-க்கு வாங்க கிடைக்கிறது. இந்த சாம்சங் போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது கேலக்ஸி எம்13 5ஜி போன்.

குறிப்பாக ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் போன். மேலும் 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி,பாஸ்ட் சார்ஜிங் வசதி, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி போன்.

ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்!

மோட்டோரோலா ஜி62 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோரோலா ஜி62 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த மோட்டோரோலா போன் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளிட்ட அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த மோட்டோரோலா ஜி62 5ஜி போன்.

போக்கோ எம்4 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.11,999-விலையில் வாங்க முடியும். இந்த போன் மீடியாடெக் Dimensity 700சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 6.58-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போக்கோ போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best 5G Smartphones Under Rs 15,000: Here's the List!: Specs, Features and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X