Home
Mobile

ரூ.10,000க்கு கீழ் 5ஜி போனை தேடுறீங்களா? அப்போ இந்த தரமான போன்களை மிஸ் பண்ணாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க!

இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்கின்றன. குறிப்பாக இந்த பட்ஜெட் விலை போன்களுக்கு தான் நாடு முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ரூ.10,000க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்த பதிவில் பார்க்கலாம்

மோட்டோரோலா ஜி45 5ஜி (Motorola G45 5G) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 50எம்பி கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 6.5-இன்ச் டிஸ்பிளே, 5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன்.

ரூ.10,000க்கு கீழ் 5ஜி போனை தேடுறீங்களா? இந்த போன்களை மிஸ் பண்ணாதீங்க.

சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (SAMSUNG Galaxy A14 5G) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சாம்சங் போன் 6.6-இன்ச் இன்ச் டிஸ்பிளே, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 13எம்பி செல்பி கேமரா, எக்ஸிநோஸ் 1330 பிராசஸர், 5000எம்ஏஎச் பேட்டரி, 128ஜிபி மெமரி மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ.9,199 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக டைமன்சிட்டி 6100 பிளஸ் 5ஜி சிப்செட், 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 5000எம்ஏஎச் பேட்டரி, 128ஜிபி மெமரி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

லாவா பிளேஸ் 2 5ஜி (LAVA Blaze 2 5G) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,580 விலையில் வாங்க கிடைக்கிறது. 50எம்பி ரியர் கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 64ஜிபி ஸ்டோரேஜ், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

ரூ.10,000க்கு கீழ் 5ஜி போனை தேடுறீங்களா? இந்த போன்களை மிஸ் பண்ணாதீங்க.

விவோ டி3 லைட் 5ஜி (vivo T3 Lite 5G) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும். குறிப்பாக 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 128ஜிபி மெமரி, 6.56-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.

போக்கோ எம்6 5ஜி (POCO M6 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.9.999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 50எம்பி ரியர் கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 6.74-இன்ச் டிஸ்பிளே, 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best 5G Smartphones Under Rs 10000 in India: Check list here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X