Home
Mobile

ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள்.. சோனி கேமரா.. 6000mAh பேட்டரி.. பட்டியல் இதோ..

தற்போது பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு கம்மி பட்ஜெட்டில் 5ஜி போன்களை அறிமுகம் செய்கின்றன. அதுவும் விவோ (vivo), மோட்டோ (moto), லாவா (lava) போன்ற நிறுவனங்களின் போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5ஜி போன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

விவோ டி4 லைட் 5ஜி (vivo T4 Lite 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி இந்த போனில் உள்ளது. அதேபோல் 6.74-இன்ச் எச்டி பிளாஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது.

ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள்.. சோனி கேமரா!

IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொண்டுள்ளது விவோ டி4 லைட் 5ஜி போன். மேலும் டைமன்சிட்டி 6300 5ஜி சிப்செட், 6000mAh பேட்டரி, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவந்தது.

சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி (Samsung Galaxy M06 5G) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,485 விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும்.

6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற பல சிறப்பான அம்சங்கள் இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளன.

லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி (Lava Storm Play 5G) ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் தளத்தில் ரூ.9,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் மீடியாடெக் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி இந்த போனில் உள்ளது.

50எம்பி சோனி கேமரா, IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance), 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம், 6.75-இன்ச் எச்டி பிளாஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உள்ளிட்ட தரமான அம்சங்களுடன் இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி போன் வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா ஜி35 5ஜி (Motorola G35 5G) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளாஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன்.

ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள்.. சோனி கேமரா!

குறிப்பாக யுனிசாக் டி760 பிராசஸர், 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 16எம்பி செல்பி கேமரா, 4கே வீடியோ பதிவு வசதி, 5000mAh பேட்டரி, 20W ஃபாஸ்ட் சார்ஜிங், ஐபி62 ரேட்டிங், டால்பி அட்மாஸ் ஆடியோ, உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவந்தது.

ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G) ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் தளத்தில் ரூ.7,498 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 5160mAh பேட்டரி, 18W சார்ஜிங், 6.88-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பன அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best 5G smartphones under Rs 10000 in India: check full list here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X