சாம்சங் முதல் விவோ வரை.. ரூ.10,000 பட்ஜெட்டில் 5ஜி போன்கள்.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. பட்டியல் இதோ..
இந்தியாவில் முன்னணி நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் போட்டிப்போட்டுக் கொண்டு 5ஜி போன்களை அறிமுகம் செய்கின்றன. குறிப்பாக பட்ஜெட் விலை போன்கள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5ஜி போன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
1.சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி (Samsung Galaxy F06 5G) ஸ்மார்ட்போன் ரூ.9,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ டைமன்சிட்டி 6300 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அதேபோல் 6.7-இன்ச் எச்டி பிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி போனில் உள்ளன.
2. லாவா போல்டு என்1 5ஜி (Lava Bold N1 5G) ஸ்மார்ட்போன் ரூ.8,249 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆக்டா கோர் யுனிசோக் டி765 6என்எம் (Octa core UNISOC T765 6nm) சிப்செட், ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த
லாவா போல்டு என்1 5ஜி போன் வெளிவந்துள்ளது.
6.75 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே, 13 எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
3.டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி (TECNO Spark 30C 5G) ஸ்மார்ட்போன் ரூ.9,999 விலையில் வாங்க கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட், 48 எம்பி ரியர் கேமரா, 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
4. ஏஐ பிளஸ் நோவா 5ஜி (AI+ Nova 5G) ஸ்மார்ட்போன் ரூ.9,999 விலையில் வாங்க முடியும். யுனிசாக் டி8200 (Unisoc T8200) சிப்செட், 50எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம், 5000எம்ஏஎச் பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 6.7-இன்ச் ர்னு+ டிஸ்பிளே உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5.விவோ டி4 லைட் 5ஜி (vivo t4 lite 5g) ஸ்மார்ட்போன் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.9,999 விலையில் வாங்கிவிட முடியும்.
6.74-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, அக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300), 50எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா, 6000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) உள்ளிட்ட அம்சங்களும் இந்த விவோ போனில் உள்ளது.


Click it and Unblock the Notifications








