இதுக்கு மேல கம்மி கிடையாது.. சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள்.. இதோ டாப் 5 லிஸ்ட்.. யாரு விடுவா?
இந்தியாவில் தற்போது பட்ஜெட் விலை 5ஜி போன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. எனவே தான பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
அதேபோல் இந்தியாவில் சியோமி, ரியல்மி, மோட்டோ நிறுவனங்களின் பட்ஜெட் விலை 5ஜி போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

1.ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் தளத்தில் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 22.5 வாட்ஸ் சார்ஜிங், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

2. சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் தளத்தில் ரூ.14,990 விலையில் வாங்க முடியும். ஆனால் அமேசானில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 வரை தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக 6.6-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
மேலும் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 13எம்பி செல்பி கேமரா, சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 1330 ஆக்டோ-கோர் சிப்செட், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், 6000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
3.விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.12,999 விலையில் வாங்க முடியும். இந்த போன் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, டைமன்சிட்டி 6020 சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.

4.போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.11,999 விலையில் வாங்க முடியும். மேலும் 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது போக்கோ எம்6 ப்ரோ 5ஜி மாடல்.
5.லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அமேசானில் ரூ.11,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் 6.5-இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, டைமன்சிட்டி 700 சிப்செட் 5000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








