Just In
- 11 min ago
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- 13 hrs ago
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- 14 hrs ago
வெறும் ரூ.8,000-க்கு அறிமுகமான 15000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்! அடஇது எப்போ?
- 14 hrs ago
5 கேமரா..iPhone 13 போல் டிஸ்பிளே..விலை வெறும் ரூ.7,600 மட்டுமே.. இது என்ன போன் தெரியுமா?
Don't Miss
- News
அதிமுக அதிகார யுத்தம்:புரட்சி பயணத்தை இன்று தொடங்குகிறார் சசிகலா- தடுக்குமா ஈபிஎஸ் கோஷ்டி?
- Automobiles
மாருதியின் இந்த 3 தயாரிப்புகளுக்குதான் இந்தியாவில் டிமாண்ட் மிக மிக அதிகம்... வேற லெவல்ல விற்பனையாகியிருக்கு!
- Movies
தாய்லாந்தில் ஹனிமூன் ஓவர்...நயன்தாரா – விக்னேஷ் சிவனின் அடுத்த பிளான் என்ன?
- Finance
ஒரே வாரத்தில் ரூ.1000 சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா?
- Lifestyle
வார ராசிபலன் 26.06.2022-02.07.2022 - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- Sports
மிரட்டும் மழை.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..? இந்தியாவின் பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் 5G ஸ்மார்ட்போன்கள்., இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்!
இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகமாகும் என்பதால் பல செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக சாம்சங், ரெட்மி, விவோ நிறுவனங்கள்
அதிகளவில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன.

ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்
மேலும் இப்போது இந்தியாவில் ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 10டி 5ஜி
ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.11,999-விலையில் கிடைக்கும். குறிப்பாக இந்த சாதனத்தை அமேசான் தளத்தில் வாங்க முடியும். ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி சாதனம்.
ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
அம்பானி ஸ்கெட்ச்: அசுர வளர்ச்சியில் ஜியோ., விட்டதை பிடிக்கும் ஏர்டெல்- பரிதாப நிலையில் விஐ!

iQOO Z6 5G ஸ்மார்ட்போன்
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட iQOO Z6 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் வாங்க முடியும். இந்த iQOO Z6 5G ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரி,50எம்பி கேமரா, பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
Samsung Galaxy F13: இப்படியொரு சாம்சங் போனுக்காக தான் வெயிட்டிங்.! எப்போது அறிமுகம் தெரியுமா?

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,220-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் வாங்க முடியும். போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக்கொண்டுள்ளது.
மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக்கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன். இதுதவிர மீடியாடெக் Dimensity 810 பிராசஸர், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டு வெளிவந்துள்ளதுபோக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.
இனிமேல் அவ்ளோ ஈஸியாக ஒரு WhatsApp க்ரூப்பில் சேர முடியாது; பீதியை கிளப்பும் புது Update!

ரியல்மி 9 5ஜி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,499-ஆக உள்ளது. இந்த ரியல்மி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் வாங்க முடியும். 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போன்.
மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா+ 2எம்பி மேக்ரோ என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு 16எம்பி செல்பீ கேமரா ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் Dimensity 810 பிராசஸர் வசதி எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போன்.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி
அமேசான் தளத்தில் ரியல்மி நார்சோ 50 5ஜி (6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி) ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,334-ஆக உள்ளது. குறிப்பாக 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன்.
அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி ஸ்மார்ட்போன். இதுதவிர 5000 எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் Dimensity 800U சிப்செட் வசதியைக்
கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி .
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999