Home
Mobile

ரூ.15,000 போதும்.. 50எம்பி கேமரா.. 6000எம்ஏஎச் பேட்டரி.. சிறந்த 5ஜி போன்கள்.. இதோ பட்டியல்..

இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவேதான் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டு கொண்டு அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக ரெட்மி, மோட்டோ, சாம்சங் போன் நிறுவனங்கள் தொடர்ந்து பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் ரூ.15000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான 5G ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

ரூ.15,000 போதும்.. சிறந்த 5ஜி போன்கள்.. இதோ பட்டியல்..

1.ரியல்மி சி67 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.13,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி67 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 8எம்பி செல்பி கேமரா, டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட், 4ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 5000எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உளளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ரியல்மி சி67 5ஜி போன் வெளிவந்துள்ளது.

2.ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் தளத்தில் ரூ.11,999 விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த போன் 6.79-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் 50எம்பி கேமரா டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட், 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேடடரி, 22.5 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், 4ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் பல சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி 12 5ஜி மாடல்.

ரூ.15,000 போதும்.. சிறந்த 5ஜி போன்கள்.. இதோ பட்டியல்..

3. இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ.12,997-க்கு வாங்க கிடைக்கிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு 8எம்பி செல்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 6.78-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போன்.

ரூ.15,000 போதும்.. சிறந்த 5ஜி போன்கள்.. இதோ பட்டியல்..

4.சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனை அமேசானில் ரூ.12,990 விலையில் வாங்க முடியும். சக்திவாய்ந்த எக்ஸி நோஸ் 1330 ஆக்டோ-கோர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 13எம்பி செல்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி, 6.6-இன்ச் எல்சிடி ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது.

5. விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.12,999 விலையில் வாங்க முடியும். மேலும் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ போன். 5000எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் டைமன்சிட்டி 6020 5ஜி சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best 5G Smartphones to Buy in 2023: Here's the List : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X