5Gக்கு நீங்க ரெடியா?: குழப்பமே வேண்டாம்., இதை வாங்குவது தான் பெஸ்ட்!
பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5G சேவை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது பயன்படுத்தப்படும் 4ஜி சேவையை விட 5ஜி இணைய வேகம் 10 மடங்கும் அதிகமாக இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீப காலங்களாக அறிமுகமாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் 5G ஆதரவு இருக்கிறது. எனவே எந்த 5ஜி ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் வரலாம்.

பட்ஜெட்டுக்கு ஏற்ப மலிவு விலையில் ஸ்மார்ட்போன்கள்
உங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப மலிவு விலை, மிட்-ரேன்ஜ் விலை மற்றும் ப்ரீமியம் விலை என ஏதேனும் ஒரு ஸ்மார்ட்போன்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இதில் நீங்கள் கேமிங் பிரியர்களாக இருக்கும்பட்சத்தில் கேமிங்கை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போனில் கவனம் செலுத்துவீர்கள். கேமராவை அதிகம் பயன்படுத்துபவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் சிறந்த மெகாபிக்சல் கொண்ட கேமரா ஸ்மார்ட்போனை தேடுவீர்கள்.

சிறந்த 5G ஸ்மார்ட்போன்கள்
அதேபோல் சமூகவலைதள பயன்பாடு, வீடியோ ஸ்ட்ரீமிங் என பொழுதுபோக்கு அம்சத்தில் கவனம் செலுத்துபவராக நீங்கள் இருந்தால் நீடித்த பேட்டரி ஆயுள் கொண்ட ஸ்மார்ட்போனில் கவனம் செலுத்துவீர்கள்.
ஆனால் இந்த அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு 5ஜி ஆதரவு இருக்க வேண்டும் என்பது அவசியம்.
எனவே ரூ.30,000 விலைப்பிரிவுக்குள் கிடைக்கும் சிறந்த 5G Smartphones இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

கேமிங் பிரியர்களுக்கான சிறந்த தேர்வு Poco F4 5G
நீங்கள் கேமிங்கை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போனை தேடுகிறீர்களானால், Poco F4 5G ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். Poco F4 5G ஸ்மார்ட்போனானது 10 5Gபேண்டுகள் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது கேமிங் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளை கையாளுவதற்கு மிகச் சிறந்ததாக இருக்கும். AMOLED டிஸ்ப்ளே ஆதரவோடு டால்பி விஷன் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்று 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 4500mAh பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் MIUI 13 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4K வீடியோ பதிவு ஆதரவு உள்ளது.
Poco F4 5G விலை: ரூ.29,999

ப்ரீமியம் ஆதரவோடு Motorola Edge 30
Motorola Edge 30 ஸ்மார்ட்போனானது 144Hz ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது pOLED டிஸ்ப்ளே ஆதரவோடு ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் இயக்க முறையை கொண்டிருக்கிறது. OIS ஆதரவுடன் கூடிய பின்புற கேமரா இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 33 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 4020 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.
Motorola Edge 30 விலை: ரூ.29,999

மேம்பட்ட கேமரா ஆதரவுடன் Vivo V23
Vivo V23 ஸ்மார்ட்போனானது 50 எம்பி பிரதான சென்சார் மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனானது 90Hz AMOLED டிஸ்ப்ளே ஆதரவோடு, சிறந்த பார்வை அனுபவத்தை வழங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போனானது 4200mAh பேட்டரி வசதியோடு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.
Vivo V23 விலை: ரூ.29,990

சிறந்த கேமிங் ஸ்மார்ட்போனான iQoo Neo 6 5G
iQoo Neo 6 5G ஸ்மார்ட்போனானது 120Hz டிஸ்ப்ளே டால்பி விஷன் ஆதரவை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 80W சார்ஜிங் ஆதரவுடன் 4700mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனானது Poco F4 5G அம்சத்துக்கு ஒத்ததாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 5ஜி பேண்ட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.
iQoo Neo 6 5G விலை: ரூ.29,999

ஆல்-ரவுண்டர் செயல்திறன் கொண்ட OnePlus Nord 2T
OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போனானது சிறந்த கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது Dimensity 1300 SoC மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஏழு 5ஜி பேண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது.
OnePlus Nord 2T 5G விலை: ரூ.28,999


Click it and Unblock the Notifications