Best 5G Phones: உங்க பட்ஜெட் ரூ.25,000-ஆ? அப்போ 1 இல்ல.. மொத்தம் 7 ஆப்ஷன்ஸ் இருக்கு!

|

5ஜி சேவை வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. எனவே செல்போன் நிறுவனங்கள் இப்போதே அருமையான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன.

5ஜி ஸ்மார்ட்போன்கள்

5ஜி ஸ்மார்ட்போன்கள்

குறிப்பாக சியோமி, விவோ, சாம்சங், ரியல்மி நிறுவனங்கள் அதிகமான 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளன. மேலும்இப்போது இந்தியாவில் ரூ.25,000-க்கு கீழ் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு தான் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்த கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.17,999-விலையில் அமேசான் தளத்தில் வாங்க முடியும். கேலக்ஸி எம்33 ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டில்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.

பின்பு 1080x2400 பிக்சல் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவு, 6000 எம்ஏஎச் பேட்டரி, எக்ஸிநோஸ் 1280 ஆக்டோ-கோர் 2.4ஜிகாஹெர்ட் 5என்எம் பிராசஸர் உள்ளிட்ட பல அம்சங்களைகொண்டுள்ளது.

கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா+ 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் கேமரா+2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக்
கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.24,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, கொரில்லா கிளாஸ் 5போன்ற அம்சங்களுடன்வெளிவந்துள்ளது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி சாதனம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி, 4500 எம்ஏஎச் பேட்டரி உட்பட பல சிறப்பு அம்சங்களை கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

VPN பயன்படுத்த தடை; இந்திய அரசாங்கம் அதிரடி உத்தரவு; இந்த லிஸ்டில் Google Drive-வும் இருக்கு!VPN பயன்படுத்த தடை; இந்திய அரசாங்கம் அதிரடி உத்தரவு; இந்த லிஸ்டில் Google Drive-வும் இருக்கு!

சியோமி MI 10T 5G

சியோமி MI 10T 5G

சியோமி MI 10T 5G சாதனத்தை அமேசான் தளத்தில் ரூ.24,899-விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் எஃப்எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2400x1080 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி,குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ஆக்டோ-கோர் சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது சியோமி MI 10T 5G.

சியோமி MI 10T 5G ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. குறிப்பாக 20எம்பி செல்பீ கேமராமற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த சியோமி ஸ்மார்ட்போன்.

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.21,999-விலையில் வாங்க முடியும். இந்த ரியல்மி சாதனம் 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே,
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு,ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 920 சிப்செட் உள்ளிட்டபல அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பினபு 5000 எம்ஏஎச் பேட்டரி, 33W டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, Dolby Atmos உடன் இணைக்கப்பட்ட இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி போன்.

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.16,999-விலையில் வாங்க முடியும். இந்த ரெட்மி சாதனம் 6.6-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி சாதனம்.

ரெட்மி நோட் 11டி 5ஜி பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா,5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ரெட்மி நோட் 11டி 5ஜி சாதனம்.

ஒப்போ ஏ74 5ஜி

ஒப்போ ஏ74 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். இந்த சாதனம் 6.49-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080x2400 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது ஒப்போ ஏ74 5ஜி.

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்32 5ஜி சாதனத்தை அமேசான் தளத்தில் ரூ.20,999-விலையில் வாங்க முடியும். பின்பு 6.6-இன்ச் டிஎப்டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவு, ஆக்டோ-மீடியாடெக் Dimensity 720 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி சாதனம் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி எம்32 5ஜி பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு 13எம்பி செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் போன்ற பல அசத்தலான அம்சங்களுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Best 5G smartphones available for under Rs 25,000! Here is the list: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X