Home
Mobile

29 நாள் பேட்டரி ஆயுள்., இப்படி ஒரு 5ஜி போனை கண்டிப்பா வேணாம்னு சொல்லமாட்டீங்க!

Infinix Zero 5G 2023 ஸ்மார்ட்போனானது 6.78 இன்ச் முழு HD+ IPS LTPS டிஸ்ப்ளே உடன் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. 5G Smartphone க்கு மாற வேண்டும் என்று திட்டமிட்டருப்பவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது.

Infinix Zero 5G 2023

Infinix Zero 5G 2023

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் Infinix Zero 5G என்ற ஸ்மார்ட்போனை கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்தது. தற்போது இதன் வாரிசாக Infinix Zero 5G 2023 ஐ நிறுவனம் அமைதியாக வெளியிட்டுள்ளது.

புதிய Infinix Zero சீரிஸ் ஸ்மார்ட்போனானது 120Hz ரெஃப்ரஷிங் ரேட், 6.78-இன்ச் IPS LCD டிஸ்ப்ளே மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 சிப்செட் ஆகிய ஆதரவைக் கொண்டிருக்கிறது.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

Infinix Zero 5G 2023 ஸ்மார்ட்போனானது 3 வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. பஞ்ச் ஹோல் வடிவமைப்பு காட்சி இதில் உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா ஆதரவுகள் இருக்கிறது.5,000mAh பேட்டரி உடன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டிருக்கிறது.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை

விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Infinix Zero 5G 2023 ஸ்மார்ட்போனின் கிடைக்கும் விலை மற்றும் விவரங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடவில்லை. இந்த புதிய ஸ்மார்ட்போனானது பேர்ல் ஒயிட், கோரல் ஆரஞ்ச் மற்றும் சப் மரைனர் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் வெளியாகி உள்ளது.

முன்னதாக வெளியான இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி இந்தியாவில் ரூ.19,999 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதன் ரேம் பவர் 8 ஜிபி மற்றும் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 128 ஜிபி ஆகும். இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் ப்ளாக் மற்றும் ஸ்கைலைட் ஆரஞ்ச் வண்ண விருப்பங்களில் வெளியானது.

Infinix Zero 5G 2023 சிறப்பம்சங்கள்

Infinix Zero 5G 2023 சிறப்பம்சங்கள்

Infinix Zero 5G 2023 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், டூயல் நானோ சிம் ஆதரவுடன் Android 12-அடிப்படையிலான XOS 12 மூலம் இது இயக்கப்படுகிறது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடனான 6.78 இன்ச் முழு HD+ IPS LTPS டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 1,080x2,460 பிக்சல்கள் தீர்மானத்தைக் கொண்டிருக்கிறது.

MediaTek Dimensity 1080 5G சிப்செட்

MediaTek Dimensity 1080 5G சிப்செட்

இந்த புதிய ஸ்மார்ட்போனானது MediaTek Dimensity 1080 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8ஜிபி ரேம் ஆதரவுடன் இது இணைக்கப்பட்டிருக்கிறது. பயன்படுத்தாத சேமிப்பகத்தை பயன்படுத்தி உள்ளமைக்கப்பட்ட ரேமை 5ஜிபி வரை விரிவாக்கம் செய்யலாம்.

50 எம்பி முதன்மை கேமரா ஆதரவு

50 எம்பி முதன்மை கேமரா ஆதரவு

Infinix Zero 5G 2023 ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் ஃப்ளாஷ் உடன் டிரிபிள் ரியர் கேமரா அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் டூயல் 2 எம்பி ஷூட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. பின்புற கேமரா வினாடிக்கு 30 பிரேம்களில் 4K வீடியோ பதிவு ஆதரவை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிங்கர் பிரண்ட் ஸ்கேனர்

ஃபிங்கர் பிரண்ட் ஸ்கேனர்

Infinix Zero 5G 2023 இல் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்டும் இதில் உள்ளது. இதன்மூலமாக 256 ஜிபி வரை கூடுதலாக மெமரி விரிவாக்கம் செய்யலாம். USB Type-C போர்ட் மூலமாக இதை சார்ஜ் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரண்ட் ஸ்கேனர் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

நீடித்த பேட்டரி ஆயுள்

நீடித்த பேட்டரி ஆயுள்

Infinix Zero 5G 2023 ஆனது 33W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 29 நாட்கள் வரை காத்திருப்பு நேரத்தை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Best 5G Smartphone Launched in India by Infinix: Unveiled Infinix Zero 5G 2023! Check Price, Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X