இனி 8000mAh பேட்டரி கதை முடிந்தது.. சார்ஜ் கவலை இல்லை..10000mAh பேட்டரி கொண்ட 5ஜி போன்கள்.. லிஸ்ட் இதோ..
இந்தியாவில் பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் 10000mAh பேட்டரி கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனைகளை அறிமுகம் செய்ய தொடங்கிவிட்டன. தற்போது சந்தையில் இந்த 10000எம்ஏஎச் பேட்டரி போனுக்கு ஓரளவு வரவேற்பு உள்ளது. ஆனால் கூடிய விரைவில் இதுபோன்ற போன்களுக்கு தான் அதிக வரவேற்பு இருக்கும்.
அதுவும் 7000எம்ஏஎச் பேட்டரி அல்லது 8000எம்ஏஎச் பேட்டரி கொண்ட போன்கள் தான் தற்போது இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 8000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ள போன்கள் இரண்டு நாட்கள் வரை தான் பேட்டரி பேக்கப் வழங்குகிறது. ஆனால் 10000எம்ஏஎச் பேட்டரி கொண்ட போன்கள் 3 முதல் 4 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். தற்போது இந்தியாவில் 10000எம்ஏச் பேட்டரி உடன் கிடைக்கும் போன்கள் மற்றும் அவற்றின் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
போக்கோ எக்ஸ்8 பவர் 5ஜி (POCO X8 Power 5G)
இந்தியாவில் போக்கோ எக்ஸ்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் சில நாட்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போன் 10000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவந்தது. குறிப்பாக இந்த போன் 3 முதல் 4 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை 20 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போது ஒரு நாள் முழுவதும் பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.
6.83-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 4என்எம் சிப்செட், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உள்ளிட்ட பல அம்சங்கள் உடன் போக்கோ எக்ஸ்8 பவர் 5ஜி போன் வெளியாகி உள்ளது.
போக்கோ எக்ஸ்8 பவர் 5ஜி போனின் ஆரம்ப விலை ரூ.35,999-ஆக உள்ளது. தற்போது இந்த போன் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. மஞ்சள் மற்றும் கருப்பு நிறங்களில் இந்த புதிய போனை வாங்க முடியும்.
ரியல்மி நார்சோ பவர் 5ஜி (realme Narzo Power 5G)
ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போன் 10001எம்ஏஎச் பேட்டரி உடன் வெளியாது. அதுவும் இந்த போனின் பேட்டரி ராணுவத் தர சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளது. இதுதவிர TÜV ரைன்லேண்ட் (TÜV Rheinland) 5 ஸ்டார் பேட்டரி சான்றிதழைப் பெற்றுள்ளது இந்த ரியல்மி போன்.
80W சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் இந்த ரியல்மி போன் வெளியானது. வெறும் 5 நிமிடம் சார்ஜிங்கில் அரை நாள் வரை பேட்டரி பேக்கப் வழங்குகிறது ரியல்மி நார்சோ பவர் 5ஜி. அதேபோல் 6.8-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 4என்எம் சிப்செட் போன்ற அம்சங்கள் இந்த ரியல்மி போனில் உள்ளன.
இதுதவிர 50எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரியல்மி நார்சோ பவர் 5ஜி போன் வெளியானது. தற்போது அமேசான் தளத்தில் ரூ.32,999 விலையில் நார்சோ பவர் 5ஜி போன் வாங்க கிடைக்கிறது.

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 17 Pro Max)
செப்டம்பர் 15-ம் தேதி இந்தியாவில் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போன் 10000எம்ஏஎச் பேட்டரி உடன் வெளியானது. அதுவும் இந்த போனை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 4 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.
ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் போனில் 6.3-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 சிப்செட், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், 50எம்பி ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, 4கே வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட், டால்பி அட்மாஸ், IP69K ரேட்டிங், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் போனின் ஆரம்ப விலை ரூ.49,999-ஆக உள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும்.
ரியல்மி பி4 பவர் 5ஜி (realme P4 Power 5G)
ரியல்மி பி4 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போன் 10001எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவந்தது. அதுவும் ÜV ரைன்லேண்ட் (TÜV Rheinland) 5 ஸ்டார் பேட்டரி சான்றிதழைப் பெற்றுள்ளது இந்த ரியல்மி மாடல். 3 முதல் 4 நாட்கள் வரை இந்த போன் பேட்டரி பேக்கப் கொடுக்கும்.
6.8-இன்ச் டிஸ்பிளே, டைனம்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, IP69 ரேட்டிங், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(In-display Fingerprint Sensor)உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உடன் ரியல்மி பி4 பவர் 5ஜி போன் ரூ.32,999 விலையில் வாங்க கிடைக்கிறது.

இந்தியாவில் 10000எம்ஏஎச் பேட்டரி உடன் விரைவில் அறிமுகமாகும் போன்கள்
ஒப்போ நிறுவனம் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் ஒப்போ எப்35 ( OPPO F35) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஒப்போ போன் 10000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த போன் பட்ஜெட் வலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவில் 10000எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ வி80 லைட் 5ஜி (vivo V80 Lite 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யபபட்டது. இந்த விவோ போன் கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
10000எம்ஏஎச் பேட்டரி தான் சிறந்த தேர்வு
10000எம்ஏஎச் பேட்டரி கொண்ட போன்கள் சற்று விலை உயர்வாக இருந்தாலும் அதை தேர்வு செய்வது மிகவும் நல்லது. அதிக நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குவதுடன் சார்ஜ் பற்றிய கவலையும் இருக்காது. இந்தியாவில் 8000எம்ஏஎச் பேட்டரி கொண்ட போன்களும் தற்போது ரூ.35,000 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே இதே பட்ஜெட்டில் அதிக செயல்திறன் மற்றும் அதிக வருடங்கள் உழைக்கும் 10000எம்ஏஎச் பேட்டரி கொண்ட போன்களை வாங்குவது மிகவும் நல்லது.


Click it and Unblock the Notifications
