ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5ஜி போன்கள்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. பட்டியல் இதோ..
இந்தியாவில் பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் சமீபத்தில் விலை உயர்வை அறிவித்தன. அதுவும் ரூ.10,000 விலையில் விற்பனை செய்யப்பட்ட 5ஜி மொபைல்கள் தற்போது சற்று உயர்வான விலையில் தான் வாங்க கிடைக்கிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் ரூ.15,000-க்கு கிடைக்கும் சிறந்த 5ஜி போன்களின் (Best 5G phones under Rs 15000) பட்டியலை இங்கே பார்க்கலாம்.
1.ஒப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக டைமன்சிட்டி 6300 சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 5எம்பி செல்பி கேமரா, 6.75 இன்ச் டிஸ்பிளே, 6500எம்ஏஎச் பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், ஐபி64 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒப்போ போன் வெளிவந்தது.

2.சாம்சங் கேலக்ஸி எம்17 5ஜி (Samsung Galaxy M17 5G) ஸ்மார்ட்போன் ரூ.14,691 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 6 ஓஎஸ் அப்டேட், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 13எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 6.7-இன்ச் இன்பினிட்டி-யூ சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 5000எம்ஏஎச் பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங, ஐபி54 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
3.லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி (Lava Blaze AMOLED 2 5G) ஸ்மார்ட்போன் ரூ.14,499 விலையில் வாங்க கிடைக்கிறது. 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 சிப்செட், IP64 ரேட்டிங், 50எம்பி டூயல ரியர் கேமராக்கள், 8எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த லாவா போனில் உள்ளன.
4.விவோ ஒய்11 5ஜி (vivo Y11 5G) ஸ்மார்ட்போன் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட், 6.74-இன்ச் டிஸ்பிளே, ஐபி65 ரேட்டிங், 13எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா, 6500mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல வசதிகள் இந்த விவோ போனில் உள்ளன.
5.ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி (realme NARZO 100 Lite 5G) ஸ்மார்ட்போன் ரூ.13,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 6.8 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே, ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், 7000எம்ஏஎச் பேட்டரி, ஐபி64 ரேட்டிங், 13எம்பி கேமரா, 5எம்பிசெல்பி கேமரா உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்தது.

6.போக்கோ சி85 5ஜி (Poco C85 5G) ஸ்மார்ட்போன் ரூ.14,399 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 8எம்பி செல்பி கேமரா, ஐபி64 ரேட்டிங், 6000எம்ஏஎச் பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 6.9-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
7.ரியல்மி பி4 லைட் 5ஜி (realme P4 Lite 5G) ஸ்மார்ட்போன் ரூ.14,499 விலையில் வாங்க கிடைக்கிறது. 7000எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி 6300 சிப்செட், 13எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா, 6.8-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது.


Click it and Unblock the Notifications