Home
Mobile

பட்ஜெட் விலை 5ஜி போன்கள்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 68W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. இதோ பட்டியல்..

இந்தியாவில் தற்போது பட்ஜெட் விலை 5ஜி போன்களுக்கு (5G phones) தான் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே தான் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. சரி இப்போது ரூ.15,000-க்குள் கிடைக்கும் 5ஜி போன்களை பார்க்கலாம்.

1.டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி (TECNO Pova 5 Pro 5G) போன் ஆனது அமேசானில் ரூ.15,999-க்கு வாங்க கிடைக்கிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த போனை கம்மி விலையில் வாங்க முடியும். 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் டெக்னோ போவா 5 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.

பட்ஜெட் விலை 5ஜி போன்கள்.. 68W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. இதோ பட்டியல்

அதேபோல் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 68W பாஸ்ட் சார்ஜிங், ஆர்க் எல்இடி பேக் பேனல், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

2.சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி (SAMSUNG Galaxy M14 5G) ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.13,895 விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த சாம்சங் மாடல். மேலும் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 13எம்பி செல்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி, எக்ஸிநோஸ் 1330 ஆக்டோ-கோர் பிராசஸர், 6.6-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி போன் வெளிவந்துள்ளது.

பட்ஜெட் விலை 5ஜி போன்கள்.. 68W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. இதோ பட்டியல்

3.மோட்டோரோலா ஜி54 5ஜி (MOTOROLA g54 5G) ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.13,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி மாடல்.

மோட்டோரோலா ஜி54 5ஜி போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் பிராசஸர், 6000எம்ஏஎச் பேட்டரி, 30 வாட்ஸ் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

பட்ஜெட் விலை 5ஜி போன்கள்.. 68W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. இதோ பட்டியல்

4.ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,499 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக 6.79-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே, 5000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிரான் 4 ஜென் 2 சிப்செட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.

5.விவோ டி2எக்ஸ் 5ஜி (vivo T2x 5G) ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.12,999-க்கு வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, டைமன்சிட்டி 6020 பிராஸசர், 5000எம்ஏச் பேட்டரி உள்ளிட அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best 5G phones under Rs 15000 in India 2024: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X